சனி, 14 ஆகஸ்ட், 2010

மூட்டு வலிக்கு குட்பை

கல்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற் பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டு வலிக்கு காரணமாக அமைகின்றன.

அறிகுறிகள்:

* மூட்டுகளில் வலி, வீக்கம் காணப்படும்.
மூட்டுகள் உஷ்ணமாக இருக்கும்.

* உடல் அசதி, ஜுரம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

* மூட்டுகள் மட்டும் பாதிக்காமல் இதயம், நுரையீரல் போன்றவையும் பாதிக்கப்பட்டிருக்கும்.

* நோயின் தன்மை தீவிரமடையும்போது உடலில் கழலைகள் போல தோன்றும். இந்நிலையில் தீவிர சிகிச்சை அவசியம்.

செய்ய வேண்டியவை:

* நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும் பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காரு வதாலும் நல்ல பலன் கிடைக்கும்.

* ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டு களில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

* நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்ற வேண் டும்.

* எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டுச் செய்யலாம். அலுப்புத் தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம்.

* வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.

* நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும் போது மூட்டுகளும் தளர்வடைகின்றன.
7மணிநேரம் முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10,20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது வலியை நன்கு குறைக்கும்.

* அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட் களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம்.
உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.

* உடற்பயிற்சி தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

* வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.

வலியைப் பற்றியே நினைக்கும் பொழுது நோயின் தீவிரம் அதிகமாகத் தெரியும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல