சனி, 14 ஆகஸ்ட், 2010

சின்னப் பையனும் பருத்த மனிதனும்

ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அமெ ரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளை யாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ என்பதாகும். முன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘பருத்த மனிதன்’ என்று பெயர் சூட்டினர்.

இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற் பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

சுமாராகக் கணக்கிட்ட தில் ஹிரோ ஷிமாவில் மட்டும் குறைந்த பட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக் கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக் கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயி ருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர் வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான் மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

அமெரிக்க அரசின் அறிக்கையில் இந்த அணுகுண்டு வீச்சினால் தான் இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்தி ருந்தால் இரண்டாம் உலக யுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்தி ருக்கும்.

அதன் மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திரு ப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இச்சம்பவ த்தை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

‘அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச் செயலைச் செய்தது. அமெரிக்கா வுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை’ என்று ஜப்பான் தன் நிலையை முன்வைத்தது.

1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2ஆம் திகதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது.

‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் போய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப் பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமா னியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயாரின் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும்.

அணு குண்டு விழுந்த வுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக் கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தன.

கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக் கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்த வர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதைத் தொடக் கத்தில் தெரிந்துகொள்ள இயல வில்லை. ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் ஹிரோஷிமா நகர த்தில் உள்ள இராணுவப் பிரிவைத் திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது.

மறுபக் கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமைய கம் குழப்பம் மேலிட்டு பதற்றம டைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து வரப் பணிக்கப்பட்டார்.

அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்தபோது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வான மண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப் பதைப் பார்த்தனர்.

மிகுந்த சிரமப் பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்துகொண்டது.

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணி நேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப் பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது.

1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரண மாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லா யிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக் குழந்தைகள் பிறக்கின்றன. கை, கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபட்மான்’ அணுகுண்டு வெடித்த வுடன் பதினெட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு எகிறித் தீப்பிழம்பாய்த் தெரிந்தது. தீச்சுவாலை அணைந்த வுடன் அடர்த்தியான நச்சுக் கரும் புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன என்று குறிப்பிடுகிறது. ஓகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மூன்று குண்டுகள் செப்டம்பரிலும் மூன்று குண்டுகளை ஒக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப் பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல