இந்த இயந்திரத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய். பழைய கதிரியக்க முறையில் தினமும் பத்து நிமிடம் வீதம், குறைந்தது ஆறுவாரங்கள் வரை கதிரியக்கம் செலுத்த வேண்டும், “ரேடியோ சேஜரி” முறையில், ஒரே நாளில் 60 முதல் 90 நிமிடங்கள் வரை, அதிகபட்ச கதிரியக்கத்தை புற்றுநோய் தாக்கிய இடத்தில் செலுத்தலாம். இதனால், பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.
துல்லியமாக புற்றுநோய் கட்டிக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதால், சுற்றியுள்ள நல்ல திசுக்கள் அதிகமாக பாதிக்கப்படாது. மூளை மற்றும் வயிற்றின் ஆழமான பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு, “ரேடியோ சேஜரி” முறையே அதிக பலன் தரும். சிகிச்சையின் போது வலி இருக்காது. எனவே, பெரும்பாலான நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை.
காப்பீடு செய்திருந்தால், இம்முறையில் சிகிச்சை பெறலாம். கடந்த ஓராண்டில் 400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய், வெளியில் தெரியும் பாகங்களில் உள்ள புற்று நோய்க்கு சாதாரண கதிரியக்க சிகிச்சை பெறலாம். முற்றிய நிலையில் உள்ள நோய்களுக்கு “ரேடியோ சேஜரி” முறையே சிறந்தது என்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக