வென்ட்டி எட்மண்ட் கிறீன் (41 வயது) என்ற மேற்படி பெண், தனது காதலரான டேவிட் றியுபென் கிறீனுடன் (52 வயது) வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் டேவிட் றியுபென் கிறீனை நீண்ட காலமாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் டேவிட் கிறீனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். செப்டம்பர் 7 ஆம் திகதி வென்ட்டியும் டேவிட் கிறீனும் இருந்த வீட்டில் பொலிஸார் தேடுதல் நடத்தினர். இதன்போது பொலிஸாரால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து இடம்பெற்ற விசாரணையின் ஒரு கட்டமாக அவர்கள் சுமார் ஒரு மாதம் கழித்து வென்ட்டியின் வீட்டிற்கு விஜயம் செயதனர்.
இதன்போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எங்கிருந்தோ தாங்கிக் கொள்ள முடியாத துர்நாற்றம் வீசுவதை பொலிஸார் உணர்ந்தனர்.
அவர்கள் சந்தேகத்தில் குளிர்சாதனப் பெட்டியை திறந்தபோது, அங்கு டேவிட் கிறீனின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
டேவிட் கிறீன் கடந்த ஏப்ரல் மாதமளவில் கொல்லப்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
வென்ட்டியும் டேவிட் கிறீனும் சட்டபூர்வமாக திருமணம் செய்யவில்லை என்ற போதும், அவர்களுக்கு அலெக்ஸிஸ் (17 வயது) என்ற மகளும் 15 வயது மகனொருவரும் உள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் இந்த படுகொலை தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக