செவ்வாய், 12 அக்டோபர், 2010

இந்திய கவர்னர் ஜெனரலை கேலி செய்த ரேடியோ அறிவிப்பாளர் மன்னிப்பு கேட்டார் (படங்கள் இணைப்பு)

சர் ஆனந்த் சத்யானந்தா
நியூசிலாந்து கவர்னர் ஜெனரலாக இருப்பவர் சர் ஆனந்த் சத்யானந்தா. இவர் ஒரு இந்தியர். இந்தியாவை சேர்ந்த இவரை அந்நாட்டு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் விமர்சித்துள்ளார்.
மைக்கேல் லாஸ்

நியுசிலாந்து நாட்டில் ரேடியோ அறிவிப்பாளர் மைக்கேல் லாஸ், கடந்த வாரம் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் கவர்னர் ஜெனரல் ஆனந்த் சத்தியானந்தை பெரிய கொழுத்த மனிதர் விருந்து டேபிளை விட்டு எழுந்திருக்காதவர் என்று கேலி செய்து இருந்தார். மேலும், ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

 ஆனால், சர் ஆனந்த் சத்யானந்தா இந்தியராக இருப்பதால் பொருத்தமற்றவராக இருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் டெல்லியின் தெருக்களில் பிச்சை எடுத்து கொண்டிருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க கூடாது. 20 வயதில் சாப்பிடுவதற்கு ஆரம்பித்த ஆனந்த் சத்யானந்தா, உண்மையிலேயே இன்னும் சாப்பிடுவதை நிறுத்தவில்லை என்று விமர்சித்துள்ளார்.

இனவெறி சாயலுடன் கூடிய இந்த விமர்சனத்துக்கு பெருத்த கண்டனங்கள் எழுந்தன.

நிறவெறியைக் காட்டும் வகையில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் இதை கூறவில்லை. இது அவருடைய தனிப்பட்ட பேச்சு என்று வானொலி நிலையம் மைக்கேலை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளது.
ஜான் கீ

இந்த விமர்சனத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் ஜான் கீ கடும் கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து மைக்கேல் லாஸ் கவர்னர் ஜெனரலிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து நியூசிலாந்திலும் இந்தியர்களுக்கு அவமானம் ஏற்பட்டு வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல