மூத்த மகன் உஸ்மான்
கணவனிடமிருந்து பிரிந்து புதிய காதலர் ஒருவரை தேடிக் கொண்ட நிறுவன உமையாளரான செல்வந்த பெண்ணொருவர், தனது 16 வயது மற்றும் 21 வயதுடைய மகன்மாரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் தொடர்பான செய்திகள் திங்கட்கிழமை பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
3 பிள்ளைகளின் தாயான ஆஸியா ஷஹ்ஸாத் (40 வயது), தனது கணவரான ராஜூவிடமிருந்து (45 வயது) பிரிந்து பக்ஸ் நகரில் அயிலெஸ்பறி எனும் இடத்தில் அமைந்துள்ள 600,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியுடைய ஆடம்பர இல்லத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
அவருடன் அவரது இரண்டாவது மகனான லுக்மார்னும் (18 வயது), 16 வயது மகனும் வசித்து வந்தனர். லுக்மார்ன் உடல் ஊனற்றவராவார்.
அதேசமயம் மூத்த மகனான உஸ்மான் (21 வயது) வேறொரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் ஆஸியா ஷஹ் ஸாத்திற்கு புதிதாக ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டது.
தமது தாயின் புதிய காதல் தொடர்பு மகன்மாருக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது. தாயின் புதிய காதல் தமது குடும்ப கௌரவத்துக்கு களங்கம் விளைவிப்பதாக கருதிய உஸ்மானும் அவரது 16 வயது சகோதரரும் சனிக்கிழமை தமது தாயை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
ஆஸியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போராடி மகன்மாரை தாக்கியுள்ளார். இதன்போது 16 வயது மகன் காயமடைந்துள்ளார்.
அநாமதேய தொலைபேசி அழைப்பொன்றையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஸியாவை கண்டனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆஸியா சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஆஸியா பாடசாலை பஸ்களை விநியோகம் செய்யும் வர்த்தகத்தை நடத்தி வந்ததாகவும் தனது மகன் மார் மீது அளவு கடந்த பாசமுள்ளவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக