1990 ஆம் ஆண்டு ரொபின் தீவிலுள்ள சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்ட நெல்ஸன் மண்டேலா, 1994 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக சேவையாற்றினார்.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏலத்தில் விடப்படவுள்ள அவன் கடிதங்கள், அவர் சிறைவாசம் அனுபவித்த காலத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து எவ்வளவு துயரடைந் திருந்தார் என்பதை வெளிப்படுத்துவதõக உள்ளன என தெரிவிக்கப்படுகிறது. நெல்ஸன் மண்டேலாவால் சிறைச்சாலையில் வைத்து எழுதப்பட்ட கடிதங்களில் பல வெள்ளையின அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இக்கடிதங்கள் 2004 ஆம் ஆண்டில் முன்னாள் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அவரிடம் மீளக் கையளிக்கப்பட்டன.
1969 ஆம் ஆண்டில் தானும் தனது மனைவியும் வெள்ளையின ஆட்சியாளர்களால் சிறைவாசம் அனுபவித்த காலத்தில் தனது மகள் ஸெனிக்கும் (9 வயது) ஸின்டிக்கும் (10 வயது) எழுதிய கடிதத்தில், ““தற்போது உங்களுக்கு பிறந்தநாள் விழாவோ நத்தார் தின கொண்டாட்டங்களோ இல்லாமல் போய்விட்டது. அத்துடன் பரிசுகளோ புது ஆடைகளோ பாதணிகளோ அன்றி விளையாட்டுப் பொருட்களோ கிடைக்காது போய்விட்டன'' என நெல்ஸன் மண்டேலா குறிப்பிட்டிருந்தார்.
அதே ஆண்டில் முதல் திருமணம் மூலம் அவருக்கு பிறந்த இரு மகன்களில் மூத்த வரான தெம்பி (24 வயது) கார் விபத்தில் பலியானார். இதன்போது மகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு நெல்ஸன் மண்டேலாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
““எனது மகனின் மரணத்தை பற்றி அறிந்தவுடன் எனக்கு தலை முதல் பாதம் வரை நடுங்கியது'' என நெல்ஸன் மண்டேலா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 1970 ஆம் ஆண்டு தனது மனைவி வின்னி மண்டேலாவுக்கு எழுதிய கடிதத்தில், ““என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு பாகம் குருதிச்சுற்றோட்டம் நரம்புகளும் ஆன்மாவும் துன்பத்தில் மூழ்கியுள்ளதாக உணர்கிறேன். உங்களுக்கு உதவுவதற்கான சக்தியை முழுமையாக நான் இழந்து நிற்பது மிகவும் கசப்புமிக்க அனுபவமாக உள்ளது'' என நெல்ஸன் மண்டேலா குறிப்பிட்டிருந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக