ஷீலாதீட்சித்
டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித்தை விமர்சித்த நியுசிலாந்து நாட்டின் டி.வி. வர்ணனையாளர் பால்ஹென்றி தனது வேலையை ராஜினாமா செய்தார். பால்ஹென்றி கடந்த வாரம் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித்தின் பெயரை கேலியாக "தீட்சித்தை டிக் ஷிட்" உச்சரித்தார். மேலும் இந்தியர்களை அவமானப்படுத்தும் வகையிலும் அவர் பேசினார். அவர் பேசிய வசனம் பின்வருமாறு:-பால்ஹென்றி
“The dip shit woman. God, what’s her name? Dick Shit. Is it Dick Shit ... it looks like ‘Dick Shit’. It’s so appropriate, because she’s Indian, so she’d be dick-in-shit wouldn’t she, do you know what I mean? Walking along the street ... it’s just so funny,”
அவரது இந்த செயலுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து பால்ஹென்றியின் செயலுக்காக நியுசிலாந்து அரசு இந்திய அரசிடம் வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில் பால்ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது பேச்சும் கருத்தும் இந்தளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே இரு முறை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக