வெள்ளி, 22 அக்டோபர், 2010

வளர்ப்புத்தாய் மீது ஏறி விளையாடும் அணில்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரோஜா(48). இவரது வீட்டில் 5 மாதத்துக்கு முன்பு ஒரு அணில் 3 குட்டிகளை போட்டுள்ளது. இதில் ஒரு குட்டியை மட்டும் கைவிட்ட தாய் அணில், மற்ற 2 குட்டிகளுடன் சென்று விட்டது. தாயில்லாமல் தவித்த அணில் குட்டியை சரோஜா பராமரிக்க தொடங்கினார். குட்டி அணிலுக்கு ராமன் என்று செல்லப்பெயரும் சூட்டியதோடு அதற்கு உணவாக பால், பழம், பிஸ்கெட், சோறு என்பன கொடுத்து வந்தார்.

அணில், ஒரு கட்டத்தில் சரோஜாவின் தோள், கைகளில் அமரத் தொடங்கியது. இரவில் உறங்கும் போது அருகில் படுத்துக்கொண்டது. மேலும் சரோஜா கடைகளுக்குச் சென்றால் அவரது முதுகில், தோளில் ஏறி அமர்ந்து செல்லத் தொடங்கியது.

சரோஜாவை விட்டுப் பிரியாத அணில், அவர் பிராமாபி என்று அழைத்தவுடன் ஓடி வந்து ஏறிக்கொள்கிறது. வெளியூருக்கு சென்றாலும், அவருடன் சேர்ந்து பயணிக்க தொடங்கியது.

சரோஜாவுடன் பயணிக்கும் போது யாராவது தொட்டால் சம்பந்தப்பட்டவரை முகர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் தன்னுடைய இருப்பிடத்துக்கே வந்து விடுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல