வெள்ளி, 22 அக்டோபர், 2010

கியூப செயற்பாட்டாளர் குயிலர்மோ பானாஸுக்கு ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் விருது

கியூப அரசாங்க எதிர்ப்பாளரான குயிலர்மோ பானாஸுக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் சக்ஹரோவ் மனித உரிமைகள் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் கியூப அரசாங்கம் 52 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்ததையடுத்து பாரினாஸ் (48 வயது) தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தியிருந்தார்.

அவர் தனது எதிர்ப்பு நடவடிக்கையின் பொருட்டு 20 க்கு மேற்பட்ட உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
அத்துடன் 11 வருடத்திற்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்தார்.

மேற்படி கௌரவ மனித உரிமைகள் பரிசுக்கு இஸ்ரேலிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதியோப்பிய எதிர்க் கட்சி செயற்பாட்டாளரும் சிபார்சு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த சோவியத் அரசாங்க எதிர்ப்பாளர் அன்ட்ரேயி சக்ஹாரோவின் பெயரில் 1988 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த சமாதானப் பரிசானது, 50,000 யூரோ பெறுமதியான பணப் பரிசையும் உள்ளடக்கியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல