வெள்ளி, 22 அக்டோபர், 2010

முல்லைத்தீவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கே.பிக்கு இராணுவத்தினர் செல்யூட் அடித்து வரவேற்பு ‐ கொழும்பு ஊடகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முனியன்கட்டு குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான கே.பி.என்ற குமரன் பத்மநாதனுக்கு இராணுவத்தினர் செல்யூட் அடித்து, வரவேற்பளித்துள்ளனர். புதுமாத்தளன் பிரதேசத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவரும் கே.பிக்கு இவ்வாறான வரவேற்பை அளித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுமாத்தளன் பிரதேசத்திற்கு 200க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் செல்ல உள்ளதாகவும் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுக்குமாறு புதுமாத்தளன் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரிக்கு மேல் மட்டத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைய செயற்பட்ட அந்த இராணுவ அதிகாரி இவர்களுக்கு தேவையான உச்சளவிலான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இந்த முக்கியஸ்தர்களில் அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குமரன் பத்மநாதனும் ஒருவர்.

இந்த விஜயத்தின் போது, கே.பியின் பயண பொதியை விமானப்படைச் சிப்பாய் ஒருவரே சுமந்துச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, படையினர் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த நிகழ்வில் குமரன் பத்மநாதன் வட மாகாணத்தின் எதிர்கால முதலமைச்சர் என்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அந்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல