வெள்ளி, 22 அக்டோபர், 2010

Helmet அணிய மறுப்பவர்களுக்கு Airbag (படங்கள், காணொளி இணைப்பு)

தலைமுடியின் அழகு உருக்குலைந்து விடும் என்பதற்காக சைக்கில் ஓட்டுபவர்கள் அநேகமானோர் தலைக்கு Helmet அணிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி Helmet அணிய விரும்பாமல் மிதிவண்டி ஒட்டுபவர்களுக்காக, சுவீடனைச் சேர்ந்த இரண்டு மாணவர்களால் 6 வருடங்களாக வடிவமைக்கப்பட்ட தலைக் கவசம்தான் இந்த Airbag.

இது சட்டையின் காலர் போன்று மடிக்கப்பட்டு தோற்றமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை அணிந்திருப்பவரின் உடலில் திடீர் குலுக்கல் ஏற்படும்போது 0.1 விநாடிக்குள் இந்த எயர் பாக் தானாக விரிந்து இதை அணிந்திருப்பவரின் கழுத்தையும் தலையையும் முழுமையாக மூடிவிடும். இதன் விலை £260 ஆகும்.

இதனை வடிவமைத்த அண்ணா ஹவ்ப்ட் என்பவர் கூறுகையில், அடுத்த வருட இளவேனிற் காலத்தில் (spring) இங்கிலாந்து மற்றும் வட ஐரொப்பாவில் உள்ள கடைகள் அனைத்திலும் இந்த Airbag பரவலாக அமோகமாக விற்பனையாகும் என நம்புவதாக தெரிவித்தார்.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல