புதன், 13 அக்டோபர், 2010

விண்வெளிக்கு உல்லாசப் பயணிகளை அழைத்து செல்வதற்கான உலகின் முதலாவது விண்ஓடம்

விண்வெளிக்கு உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான உலகின் முதலாவது விண்ஓடமானது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தின் மொஜாவ் பிராந்தியத்தில் பட்சார்த்தமாக பறக்கவிடப்பட்டு பரிட்சிக்கப் பட்டது.

“வைட்நைட்ரூ' என்றழைக்கப்படும் விசேட தாய் விமானத்தின் இறக்கையில் இணைக்கப்பட்டே இந்த ஏவுகணை பறக்கவிடப்பட்டது.
விண்ணுக்கு உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த “வேர்ஜின் கலெக்றிக் ஸ்பேஸ் ஷிப் 2' என்ற ஏவுகணை கலி போர்னிய மஜாவ் பாலைவனத்திலிருந்து 45000 அடி உயரத்தில் தாய் விண்ஓடத் திலிருந்து விடுவிக்கப்பட்டது.

இந்த விண்ஓடத்தில் விமானியான பீற்சியபோல்ட்டும் இணை விமானியான மைக்அலஸ்பயும் பயணித்தனர்.

சுமார் 11 நிமிட நேர பறப்பிற்கு பிற்பாடு இந்த விண்ஓடம் மொஜாவ் விமான தளத்தில் தரையிறங்கியது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல