புதன், 13 அக்டோபர், 2010

இரத்தத்தை குடிப்பதற்கு அனுமதிக்காத இளைஞனை கத்தியால் வெட்டிய ஜோடி


ஆரொன்            அமண்டா
தனது இரத்தத்தை குடிப்பதற்கு தமக்கு அனுமதி தரமறுத்த இளைஞர் ஒருவரை கத்தியால் வெட்டிய ஜோடியொன்று கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க அரிசோனா மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் நகரில் இடம் பெற்றுள்ளது.

ரொபேர்ட் மாலி (25 வயது) என்ற இந்த இளைஞர், தனது இரத்தத்தை குடிப்பதற்கு மேற்படி ஜோடிக்கு முன்பொரு முறை அனுமதி அளித்திருந்துள்ளார். இந் நிலையில் இரத்தருசி கண்ட இரத்தக் காட்டேரிகளான ஆரொன் ஹோமரும் (24 வயது) அமண்டா வில்லியம்ஸனும் (21 வயது) ரொபேர்ட் மாலியின் இருப்பிடத்திற்கு சென்று மீண்டும் ஒரு தடவை தமக்கு இரத்தத்தை குடிக்க அனுமதிக்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர். இதன்போது ரொபேர்ட் மாலி இரத்தத்தை வழங்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆரொனும் அமண்டாவும் ரொபேர்ட் மாலியின் இடது கரத்தை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட ரொபேர்ட் மாலி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆரொனையும் அமண்டாவையும் கைது செய்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல