புதன், 13 அக்டோபர், 2010

இரு கைகளுமற்ற இளைஞர் கால் விரல்களால் “பியானோ' இசைத்து போட்டி நிகழ்ச்சியில் வெற்றி (படங்கள், காணொளி இணைப்பு)

இரு கைகளுமற்ற நிலையில் கால் விரல்களால் நேர்த்தியாக பியானோ வாத்தியக் கருவிகளை இசைத்து 23 வயது இசைக் கலைஞர் ஒருவர் சீனாவின் தேசிய மட்ட திறமை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

பீஜிங் நகரை பிறப்பிடமாக கொண்ட லியு வெயி என்ற இந்த இளைஞர், 10 வயதாக இருக்கும்போது மின்சார தாக்குதலுக்கு இலக்காகி தனது இரு கரங்களையும் இழந்தார்.

இந்நிலையில் போட்டியின் போது லியு வெயி நடுவர்களுக்கு விளக்கமளிக்கையில், ““எனக்கு மிகச் சிறந்த ஒரு ஜோடிகால்களாவது இருக்கிறது என்பதை நினைத்து திருப்தியடைகிறேன்'' என்று தெரிவித்தார்.

அவர் இந்த போட்டியின் போது பிரபல இசைக் கலைஞர் ஜேம்ஸ் பிளன்டின் யு ஆர் பியூட்டி புல்' பாடலையே பியானோ வாத்தியத்தில் இசைத்தார்.

லியு வெயி தனது விடாமுயற்சியின் பயனாக சுயமாகவே கால் விரல்களால் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. தனது 18 ஆவது வயதில் அவர் இசையை தனது தொழிலாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.

மேலும் அவர் தனது கால் விரல்களால் கணனிகளை பயன்படுத்துவதுடன் ஆடை அணிதல், உணவு உண்ணல், பல் துலக்குதல் போன்ற காரியங்களையும் செய்து வருகிறார்.

சீனாவில் நடத்தப்படும் இந்த திறமை வெளிப்பாட்டு போட்டியானது பிரித்தானிய இசை அமைப்பாளர் சிமன் கோவெலின் உலகளாவிய “பிரான்சிஸ் டலன்ஸ் ஷோ' நிகழ்ச்சியின் அங்கமாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல