o உலகம் முழுவதும் அடையாளம் காணப்படும் திருடர்களில் சராசரியாக 700 பேருக்கு ஒருவர் தான் பொலிஸாரிடம் பிடிபடுகிறார். மற்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
o வீடுகளில் நடக்கும் திருட்டுகளில் 50%, உறவினர்கள், நண்பர்கள், வேலையாட்கள் ஈடுபடுகின்றனர்.
o டொல்பின்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை தங்கள் பிள்ளைகளுக்குப் பாலூட்டி கண்ணும் கருத்துமாக பராமரிக்கும்.
o டொல்பின்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், குட்டிகளைப் பராமரிப்பதற்காகவும் எப்போதும் கூட்டமாகவே வாழும். நாம் செய்வதை, அப்படியே திரும்பச் செய்யும் திறன் மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை.
o சராசரியாக ஒரு டொல்பின் 2.5 மீட்டர் நீளமும் 74 கிலோ எடையும் கொண் டிருக்கும். அதன் துடுப்புகளில் உள்ள எலும்புகளின் கட்டமைப்பு மனிதர்களின் கைகள் மற்றும் உள்ளங்கையின் எலும்புகளை ஒத்திருக்கும்.
o நீருக்கடியில் 16 மைல் தொலைவிலி ருந்து வரும் ஒலியைக் கூட டொல் பின்கள் கண்டுபிடிக்கும். குறிப்பிட்ட ஒலியை நினைவில் வைத்துக் கொள்வதில் மனிதர்களைக் காட்டிலும் டொல்பின்கள் சிறந்தவை.
o டொல்பின்கள் தங்கள் சக்தியைத் தக்கவைத்துக் கொள்ள நீரிலிருந்து அவ்வப்போது தாவிக் குதிக்கின்றன. அவற்றின் உடலுக்கு மேலே காணப்படும் துளை வழியாகச் சுவாசிக்கின்றன. அந்தத் துளைகள் மூலம் காற்று நேராக அவற்றின் நுரையீரலைச் சென்றடைகிறது.
o பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் சாள் ஸ்டிக்கன்ஸ் கதையின் பெயர் டேவிட்கொப்பர் ஃபீல்ட்
o பிரிட்டிஷ் இந்திய காலத்தில் இந்தியாவின் கோடைகாலத் தலைநகர் சிம்லா
o இந்தியாவின் முதல் அணு சக்தி நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் ஐ. என். எஸ். சக்ரா.
o விமானத் தபால் தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா, 1929ம் ஆண்டு இதற்கென ஒரு தொகுதி சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.
o நிலவியல் வரைபடங்களின் தொகு ப்புக்கு அட்லஸ் எனப் பெயர் இது அனைவருக்கும் தெரியும். அந்த அடலஸ் என்பது யார் தெரியுமா? கிரேக்க புராணத்தில் சொர்க்கத்தைப் பாதுகாக்கும் பெரும் வீரனை தெய்வமாக வழிபட்டனர். அந்த வீரனுக்குப் பெயர் அட்லஸ் என்று கூறுகின்ற னர். இது மட்டுமின்றி கணிதத்தில் வல்லவராகத் திகழ்ந்த அடலஸ் என்ற மன்னன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் வலுவான ஆதாரங்கள் இல்லை.
o 1938ம் ஆண்டு ஹோவர் ஹ¥க்ஸ் மற்றும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் “னிரிதீ வீலிஞிறி தீலிஞிழிளி பிதியிஞி”
o நியூசிலாந்தைச் சேர்ந்த கீ என்ற பறவை கார் கண்ணாடிகளைச் சுற்றியுள்ள இறப்பரை விரும்பிச் சாப்பிடும். அதைத் தடுக்க முயன்றால் கடும் கோபம் கொண்டு தாக்க வரும். செம்மறி ஆடுகளின் உடலில் தன் கூரிய அலகால் குத்தி அவற்றின் கொழுப்பைச் சாப்பிடும் வழக்கத்தை கீ பறவை கொண்டுள்ளது.
o ஐஸ்லாந்து நகரத்தில் நாய் வளர்க்கக் கூடாது என சட்டம் உள்ளது.
o கழுதையின் கண்கள் அதன் நான்கு கால்களையும் தலையைத் திருப்பாமலேயே பார்க்கும்படி அமைந்துள்ளது.
o ஒட்டகத்துக்கு மூன்று கண் இமைகள் இருக்கும். இதன் மூலம் பாலைவனங்களில் காற்றில் மணல் வீசும்போது எளிதாக சமாளிக்கிறது.
o முள்ளம்பன்றி மிக எளிதாக நீரில் மிதக்கும்.
o நீல நிறத்தைப் பார்க்கக் கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டுமே!
o தேனீக்களின் கண்களில் ஒரு விதமான முடி வளர்ந்திருக்கும்
o தாவிக்குதிக்க முடியாத சில விலங்குகளில் யானையும் ஒன்று, அதனால் சில அடிகள் கூட தாவ முடியாது.
o உண்ணி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து பனிக்கட்டு கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
o அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
o ஒட்டகம் 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாகக் கண்டுபிடித்துவிடும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக