புதன், 13 அக்டோபர், 2010

நாயை கடித்த அமெரிக்க இளைஞர்

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியை தாக்கியவரை போலீஸ் நாய் கடித்தது. கடி வாங்கியவர் பதிலுக்கு நாயை கடித்தார். அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட்டில் உள்ள வெஸ்ட் ஹாவனில் இந்த விநோத சம்பவம் சென்ற வியாழக்கிழமை நடந்தது. வெஸ்ட் ஹாவன் பகுதியில் போலீஸ் அதிகாரியின் இடுப்பு பட்டையில் இருந்த பணத்தை 23 வயது ரோட்ரிக் லூயிஸ் என்ற இளைஞர் பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்டு எதிர்த்து போராடிய போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் லூயிஸ் அறைந்தார்.

இதை போலீஸ் அதிகாரியின் வாகனத்தில் இருந்த நாய் பார்த்து விட்டது. வாகனத்தில் இருந்து குதித்த ஓடி வந்த நாய், லூயிசை தாறுமாறாக கடித்தது. இதில் ஆத்திரம் அடைந்த லூயிஸ், நாயை இறுக்கிப் பிடித்து பலம் கொண்ட மட்டும் பதிலுக்கு கடித்தார். போலீஸ் அதிகாரி பிடித்து தள்ளும் வரை நாயின் உடம்பில் இருந்து வாயை லூயிஸ் எடுக்க வில்லை. அலறித் துடித்த நாய், பரிதாபமாக கத்தியது. போலீஸ் அதிகாரியை தாக்கியது, திருட முயன்றது போன்ற செக்ஷன்களுடன் நாயைக் கடித்ததற்காக விலங்கை கொடுமை செய்த பிரிவின்கீழும் லூயிசின் மீது போலீசார் வழங்கு பதிவு செய்தனர். போலீஸ் வளர்க்கும் மோப்ப நாயையே ஒருவர் கடித்துக் குதறிய சம்பவம் கனெக்டிகட் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல