கடந்த 11 மாத காலப் பகுதியில் 6 ஆண்கள், பெண்கள் குழுக்களால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக அந்நாட்டு உத்தியோகபூர்வ தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படும் ஆண்களில் பலர் தமக்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்த தயங்கி முறைப்பாடு செய்ய முன் வராததால், பாதிக்கப்பட்ட ஆண்களின் தொகை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என கருதுவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலாவயோ எனும் இடத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 3 பெண் பயணிகளுடன் வந்த பஸ்ஸில் ஏறிய வேளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டுளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் பஸ்ஸில் ஏறி ஆசனத்தில் அமர்ந்தவுடன் பெண் பயணிகளில் ஒருவர் மயக்க மருந்திடப்பட்ட துணியை அவரது மூக்கில் அழுத்தவும் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
அவர் மயக்கம் தெளிந்ததும் மூன்று பெண்களும் தன்னை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்வதை கண்டுள்ளார்.
அதன் பின் அவர் நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் கைவிடப்பட்டுள்ளார்.
இதையொத்த சம்பவங்கள் ஹராரே குவேரு மற்றும் மஸ்வின்கோ ஆகிய நகர்களிலும் இடம்பெற்றுள்ளன.
கடந்த மாதம் ஹரேரேயில் வீதியில் சென்ற 44 வயது நபரொருவருக்கு தமது காரில் ஏற இடம்கொடுத்த இரு பெண்கள், அவரை பாலியல் ரீதியில் பலவந்தப் படுத்தியுள்ளனர்.
அவரை வீடுவரை அழைத்துச் செல்வதாக கூறிய அப்பெண்கள், பாலியல் வல்லுறவுக்குப் பின் அவரை அவரது வீட்டிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஹரேரேயில் ரோமன் கத்தோலிக்க தேவாலயமொன்றில் 18 வயது இளைஞன் ஒருவன் இரு யுவதிகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டான்.
தெருவில் செல்லும் ஆண்களுக்கு வலிய வந்து தமது வாகனங்களில் இடம் வழங்கியே மேற்படி பெண்கள் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் பெண்கள் கருத்தடை உறைகளை பாவிப்பது வழமையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களது விந்தணுக்களை பெறுவது வாழ்வில் சுபீட்சத்தை தரும் என அங்குள்ள சில மந்திரவாதிகள் பெண்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றமையே ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு காரணமாகுமென கூறப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக