திங்கள், 4 அக்டோபர், 2010

கலிலியோ நிலாக்கள்

சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஒன்று தான் வியாழன். சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள வியாழன் தான் உதவியாக இருக்கிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வரை, பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றி வருவதாக அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.

இந்தக் கூற்று தவறு என்று முதலில் சொன்னவர், வானியல் அறிஞரான கொப்பணிக்கஸ் ‘நாம் வசிக்கின்ற சூரியக் குடும்பத்தில் பூமி உட்பட எல்லாக் கிரகங்களும் சூரியனைத் தான் சுற்றுகின்றன’ என்றார். ஆனால் அவர் கூறியதற்கு அப்போது ஆதாரம் எதுவும் இல்லாததால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் 1601ம் ஆண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் கலிலியோ. ஒவ்வொரு கிரகத்தையும் தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து கொண்டிருந்தவர், வியாழன் கிரகத்தைப் பார்த்தபோது ஆச்சரியத்தில் உறைந்தார். காரணம், வியாழனைச் சுற்றி நான்கு ஒளிப்புள்ளிகள் தெரிந்தன.

மறுநாள் பார்த்தபோது அவை இடம்மாறி இருந்தன. அதற்கடுத்த நாள் பார்த்த போது அவற்றில் ஒன்றை மட்டும் காணவில்லை. இப்படியே தொடர்ச்சியாக சில நாட்கள் வியாழனின் சுற்றுப் பாதையை ஆராய்ந்தவருக்கு உண்மை புலப்பட்டது. அவர் பார்த்த நான்கும் வியாழனின் நிலாக்கள் என்றும், ஒரே சீரான வேகத்தில் அவை வியாழனைச் சுற்றி வருவதையும் அவர் கண்டறிந்தார்.

வானத்தில் இருக்கிற எல்லாமே பூமியைத் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டு இருந்த சமயத்தில், கலிலியோவின் இந்தக் கண்டு பிடிப்பு மகத்தானது, ‘பூமியைச் சுற்றாத சில பொருட்களும் வான்வெளியில் உள்ளன. அவை வெவ்வேறு கிரகங்களைச் சுற்றி வருகின்றன’ என்று தான் கண்டுபிடித்த உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

மேலும், ‘சூரியன்தான் இந்த ஓட்டுமொத்தக் கிரகங்களின் மையப்புள்ளி’ என்ற கொப்பணிக் கஸின் கொள்கையை இவர் ஆதரித்தார். இப்படி சூரியக் குடும்பம் பற்றிய தெளிவான முடிவிற்குக் காரணமாக இருந்தது வியாழன் தான். கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு நிலாக்களுக்கும் ‘கலிலியோ நிலாக்கள்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல