நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சரத் பொன்சேகாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மன்னிப்பு கேட்பதில்லை என்று தீர்மானம் எடுப்பதும் அவர்களை சார்ந்த உரிமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிக்க போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எக்காரணம் கொண்டும் மன்னிப்பு கோரப்பட மாட்டாது என்றும் ஜனநாயக தேசிய கூட்டணி தெவித்துள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:
சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை தொடர்பில் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டும் ஜனநாயக ரீதியிலும் பொன்சேகாவை சார்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அது தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை.
ஜனநாயக கட்டமைப்புக்குள் உட்பட்டு யாரும் எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். அது நாட்டு பிரஜைகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இருக்கின்ற உரிமையாகும். இது ஜனநாயக நாடு என்பதால் அவற்றை தடுக்க முடியாது என்றார் கெஹலிய ரம்புக்வெல.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக