திங்கள், 4 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவிற்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் யுத்த காலத்தில் எங்கிருந்தார்கள் ‐ கோதபாய!

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல் தலைவர்கள் நான்காம் ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் எங்கிருந்தார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி ஜனாதிபதி எதிர்த்து போட்டியிடுவதற்கு தீர்மானிக்கும் வரையில் எந்தவொரு நபரும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா நாற்பது ஆண்டு காலம் இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது வழங்கப்படாத ஆதரவினை அரசியல்வாதிகள் திடீரென வாரி வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர் குலைப்பதற்காக கருவியாக சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சாரங்களை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரணடைய வந்த புலிகளை சுட்டுக் கொன்றதாக சண்டே லீடர் பத்திரிகைக்கு செவ்வி அளித்தமையை விட வேறும் பாதகமான பிரச்சாரங்கள் இருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் குற்றச் சாட்டுக்கள் காரணமாகவே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நிபுணர்கள் குழு அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதனை எதிர்க்கட்சிகள் மறந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து அடைந்த சில அரசியல் தலைவர்கள் கீழ்த்தரமான பிரச்சாரங்களின் மூலம் அரசியல் லாபங்களை ஈட்ட முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவினால் இராணுவ நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்ட பல அதிகாரிகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்த தரப்பினரே இன்று அவருக்காக குரல்கொடுத்து வருவதாக கோதபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல