பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனை குறித்து எழுதிய பத்தி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவை சிறையில் அடைத்துப் படுகொலை செய்தார். தமிழீழ கதாநாயகர்களில் ஒருவராக புலிகள் இயக்கத் தலைமையால் ஒரு காலத்தில் புகழப்பட்டவர் இதே மாத்தையாதான்.
பின்னர் மாத்தையாவுக்கு இதே புலித் தலைமை துரோகி முத்திரை குத்தி விட்டது. மாத்தையா புலிகள் இயக்கத்தின் இராணுவ தளபதியாக இருந்தவர். இந்திய அமைதி காக்கும் படையினருடனான புலிகள் இயக்கத்தின் சண்டையின்போது மாத்தையா காத்திரமான பங்களிப்புச் செய்தவர்.
ஆனால் புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருந்தும், இயக்கப் போராளிகளின் மனங்களில் இருந்தும் மாத்தையா தூக்கி எறியப்பட்டார். பிரபாகரன் மாத்தையாவைத் துரோகி என்று பிரகடனப்படுத்தினார். மாத்தையா பின்னர் ஒரு துரோகியாகவே இயக்கத்தால் பார்க்கப்பட்டார்.
இயக்கத் தலைவர் பதவியை மாத்தையா தட்டிச் செல்லக் கூடும் என்கிற அச்சம் காரணமாகவே மாத்தையா விடயத்தில் பிரபாகரன் இப்படியெல்லாம் நடந்து கொண்டார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று இப்படித்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார். உலகிலேயே தலை சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவர் என்று பொன்சேகாவை மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசு ஒரு காலத்தில் கொண்டாடியது.
யுத்த கதாநாயகர் என்று கூட புகழந்து தள்ளியது. ஆனால் பொன்சேகா இராணுவ தளபதி பதவியில் இருந்து ஜனாதிபதியால் தூக்கி எறியப்பட்டார். பொன்சேகாவின் ஜெனரல் பதவி பறிக்கப்பட்டு விட்டது. பதக்கங்கள் பறிக்கப்பட்டு விட்டன.
இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். துரோகி முத்திரை குத்தப்பட்டுள்ளார்.பொன்சேகா போட்டியாக இருக்கின்றார் என்பதே இவற்றுக்கு எல்லாம் காரணம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக