திங்கள், 4 அக்டோபர், 2010

இலகுவான முறையில் பணம் சம்பாதிப்பதற்காக தனது மகனை ஒரு நோயாளியென வெளி உலகிற்கு காட்டிய தாய் (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்தில் கரோல் லின் ஸ்னபேஸ் 47, எனும் பெண் தனது 12 வயது (கிற்ஸ்தொபர்) மகனைப் பயன்படுத்தி பொதுமக்கள் , உதவி ஸ்தாபனங்கள் மற்றும் தேவலய திருச்சபைகள் மூலம் பணம் பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆரம்பத்தில் கரோல் லின் தனது மகன் சாப்பிடும் உணவில் உடம்பை மெலிய வைக்கும் மருந்துகளை சேர்த்துக் கொடுத்து படிப்படியாக மகனின் உடம்பை மெலிவடையச் செய்துள்ளார். மகன் மெலிவடைந்து கொண்டு வருவதை முதலில் தனது வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கு தனது மகனுக்கு புற்று நோய் என்று கதையை கட்டி விட அது எல்லா இடமும் பரவத் தொடங்கிவிட்டது. சிறிது காலத்திற்கு பின்னர் தனது மகனுக்கு மொட்டை அடித்து, கண் இமைகளையும் சவரம் செய்து அது புற்று நோய்க்கு செய்யப்படும் கதிர்வீச்சு மருத்துவத்தால் முடிகள் யாவும் உதிர்ந்து விட்டன என்று கூறியதோடு இன்னும் பல சிகிச்சைகள் மேற்கொள்ளவேண்டும், அதற்கு நிறைய பணம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், எனது கையிருப்பும் செலவழிந்து விட்டது , எப்படித்தான் எனது மகனைக் காப்பாற்றப்போகிறேன் என்று தெரியவில்லை என் தனது கற்பனைக் கதைக்கு மேலும் மெருகூற்றினார்.
இதனால் இந்த குடும்பத்தின் மீது அனுதாப அலைகள் குவியத்தொடங்கின. நாளடைவில் இவ்விடையத்தை கேளிவிப்பட்ட உள்ளூர் தொலைக்காட்சியொன்று இவர்களை அழைத்து இவர்களின் விடயத்தை உண்மையென நம்பி இவர்களை பேட்டி கண்டு, இவர்களுக்கு பொதுமக்கள், ஸ்தாபனங்கள் பண உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. இதன் பின்னர் இவர்களுக்கு நாடளாவிய ரீதியில் இருந்து பண உதவிகள் வந்து குவிந்தன. பற்றாக்குறைக்கு, கரோல் லின் தனது பேஸ்புக் இணையதளம் மூலமும் இக்கதையை பரப்பி பண உதவி பெற்றுள்ளார்.
சில மாதங்களின் பின்னர், இவ்விடயத்திற்கு தானே முற்றுப்புள்ளி வைக்க எண்ணி கரோல் லின் முதலில் தனது பேஸ்புக் இணையதளத்தில் "தனது மகன் இறந்து விட்டார்" என்று அறித்தார். அதன்பின்னர், தனது அயலவர்களிடமும் "தனது மகன் இறந்து விட்டார்" என்ற கதையை பரப்பினார். இதனைக் கேளிவிப்பட்ட அயலவர்கள் நேரில் சென்று தங்களின் அனுதாபத்தை தெரிவித்த பின்னர் இறுதிக்கிரியைகள் எங்கே, எப்போது நடைபெறும் என விசாரித்துள்ளார்கள். அதற்கு கரோல் லின் "தனது மகனுக்கு பகிரங்க இறுதிக்கிரியைகள் நடத்துவதை தான் விரும்பவில்லை என்றும், அதனை ஒரு குடும்ப இறுதிக்கிரியையாகவே நடத்த விரும்புவதாகவும், யாரும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ள வேண்டாம்" என்று அவர்களிடம் கூறியுள்ளார்.

இதனக்கேட்டு கரோல் லின் மீது சந்தேகமடைந்த சிலர் பொலிஸாருக்கு இவ்விடயம் பற்றி தெரியப்படுத்தியுள்ளனர். பொலிஸார் கரோல் லின் வீட்டிற்கு சென்று அவரது மகன் கிற்ஸ்தொபரின் உடலம் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்று விசாரித்தபோது கரோல் லின் எதுவும் சொல்ல முடியாமல் திரு திருவென்று விழிக்கத் தொடங்கியதும், பொலிஸார் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் அவரின் மகன் உயிருடன் இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் பொலிஸார் கரோல் லின்னை கைது செய்து அழைத்துச்சென்ற போதுதான் இவரின் திருவிளையாடல் வெளி உலகிற்கு தெரிய வந்தது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல