வியாழன், 7 அக்டோபர், 2010

பெண்கள் எந்த வலியையும் தாங்கும் சக்தியுடையவர்கள் (படங்கள் இணைப்பு)

பெண்கள், தங்களை அலங்கரித்துக் கொள்ள, அல்லது தாங்கள் வடிவாக காட்சியளிக்க வேண்டுமென்றால் எந்த வலியையும் பொறுத்துக் கொள்வார்கள். உடம்பு இளைக்க வேண்டுமென்றால் பட்டினி கிடப்பார்கள். மூக்கில் ஓட்டை போட்டு மூக்குத்தி குத்திக்கொள்வார்கள், காதில்ஓட்டை போட்டு தோடு மாட்டிக்கொள்வார்கள் இது வழக்கம்தான்.

ஆனால் இங்கு ஒரு பாடகியோ தன் முகத்தில் பல ஓட்டை போட்டு பியர்ஸிங் மாட்டியுள்ளார். பிரபலமான இந்த அழகியின் பெயர் பீட் . சமீபத்தில், லண்டன் நகரில் நடந்த, விழா ஒன்றில், தன் கணவருடன் கலந்து கொண்டார். அப்போது எல்லோரது பார்வையும் பீட் மீதுதான் விழுந்தது. காரணம், இவர் தன் முகத்தில், கண் புருவத்தின் மீதும், நெற்றியிலும், கன்னங்களிலும் ஓட்டை போட்டு, விதவிதமான பியர்ஸிங் அணிந்திருந்தார்.

இவருக்கு இப்போது வயது 51. இவர் 2000 முதல் 2004ம் ஆண்டு வரை பல முறை அழகூட்டும் அறுவை சிகிச்சைகளை செய்தார். ஆனால், அந்த அறுவை சிகிச்சைகள் அவர் எதிர்பார்த்த அளவு அழகை கூட்டவில்லை. உடனே, அந்த மருத்துவர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இவருக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பவுன்ட் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஆண்டுதான் இந்த பணத்தை பெற்றார் பீட்.
இப்ப                    முன்பு


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல