பதிலாக, உதவுவோரையும் உதவகக்கூடிய நிறுவனங்களையுமே அவை கொண்டிருக்க வேண்டும். கணக்கிலும் களஞ்சியத்திலும் எல்லாவற்றையும் நிரப்பி வைப்பதை விட தேவைப்படும் மக்களுக்கு அவற்றைக் கொடுப்பதே உதவி. இப்போது வன்னி மக்களுக்கு எவ்வளவோ உதவிகள் தேவை. அவர்களுக்கு எல்லாமே தேவையாக இருக்கும்போது நாம் எப்படி எங்கள் கணக்குகளில் பெருந்தொகையைப் போடமுடியும்.....?
அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மிகவும் சிரமப்படுகி றார்கள். இந்த நேரத்தில் உதவுவதே உதவி.
அவர்கள் இதுவரையிலும் துயரச் சிலுவைகளைச் சுமந்து களைத்தவர்கள். அவர்களை வைத்து இனியும் யாரும் அரசியல் நடத்துவது அழகில்லை. இதுவொரு மனிதாபிமா னத்துக்கான தருணம். ஆகவே இந்தச் சந்தர்ப்பதில் எம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
இந்த நண்பர் சொன்ன விடயங்கள் நமது கவனத்திற்குரியவை. காரணம், இவர் வன்னி யில் துன்பப்படும் மக்களின் நிலைமையை வெளிப்படுத்துகிறார். அதை நன்றாகப் புரிந் தும் வைத்திருக்கிறார். அதனால்தான் அவர்களுடைய கணக்கில் அதிக பணம் இருக்க வில்லை. அதிக பொருட்களும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் அவர்கள் தேவைப்படும் மக்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள். மக்களுக்குக் கொடுக்கக் கொடுக்க சேவை விரிவடையும். சேவை விரிவடைய உதவுவோரின் ஆதரவும் கிடைக்கும். அது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நண்பருக்கும் அவர் சார்ந்த உதவியமைப்பினர்களுக்கும் இருக்கிறது என்பது.
அடுத்தது, அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற வேட்கையோடு இருக்கிறார்.
அதற்காக அவர் முயன்று கொண்டிருக்கிறார்.
ஏனெனில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான தேவைகள் எவ்வளவோ இருக்கும் போது அவற்றுக்கு முன்னுமை அளித்துச் செயற்படுவது அவசியம் என்பதைப் புரிந்திருக்கிறார்.
இதுவரையான காலத்தில் வன்னி மக்கள் சந்தித்த அவலங்களையும் அவர் மனதில் கணக்கிட்டிருக்கிறார். மக்களோடு பழகுவதால், மக்களிடையே அவர் இருப்பதால் இந் தப் புரிதல் ஏற்பட்டிருக்கிறது.
அடுத்தது வன்னி மக்களுக்குப் பல தேவைகள் அவசர நிலையில் இருப்பதையும் அவர் வெளிப்படுத்துகிறார். ஆகவே உதவக்கூடிய அனைவரும் இந்த மக்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்பதே நண்பரின் சேதி.
அது உண்மையும்கூட. இதற்கு எந்தக் காரணங்களையும் சாட்டுப் போக்குகளையும் சொல்லக்கூடாது என்பதும் நணபர் சொல்லாமற் சொல்லும் சேதியாக இருக்கிறது.
அரசாங்கம் பொறுப்போடு செயற்படலாம் விடலாம். அதை மக்கள் புரிந்து கொள் வார்கள். அவர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு அரசாங்கத்தின் தவறுகளுக்கெதிராகப் போராடக்கூடும். அல்லது அடுத்துவரும் தேர்தற் காலத்தில் அவர்கள் தங்கள் தீர்ப்பை வழங்குவார்கள்.
ஆகவே அரசாங்கத்தை குறை சொல்லிக் கொண்டும், குற்றம் சாட்டிக் கொண்டும் இரு ப்பதால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வற்றி விடப்போவதில்லை. அவர்களுடைய தேவைகளும் பிரச்சினைகளும் தீர்ந்து விடப் பபோதுமில்லை.
அப்படி அரசாங்கத்தைக் குற்றம் சாட்டி விட்டு நாம் விலகியிருப்பது என்பது அந்த மக்களுக்கு நாம் செய்யத்தவறுகின்ற கடமைகளாகவே இருக்கும். குளத்துடன் கோவித்துக் கொண்டு குளிக்காமல் இருப்பதற்கு அது ஒப்பாகும். பதிலாக இழப்பும் கஷ்டம் நமக்கும் நமது மக்களுக்குமாகவே இருக்கும்.
இலங்கை அரசியல் மரபின்படி இந்த மாதிச் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் முழுமை யான பங்களிப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில்லை. அது சிங்களவர்களுக் காக இருந்தாலென்ன? தமிழ் பேசுவோருக்காக இருந்தாலென்ன?
சந்திகா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னான புனரமைப்புக்காக சர்வதேச சமூகம் அள்ளிக் கொடுத்த உதவிகள் உரிய மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டனவா?
இன்னும் காலியிலும் அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் சீரமைக்கப்படாத பல கட் டடங்களும் வீடுகளும் மிஞ்சியிருக்கின்றன.
அதைவிட, இதற்கு முன்னரான காலப்பகுதியில் இனவன்முறையினாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்ட ஈட்டையோ புனரமைப்பையோ இதுவரையில் எந்த அரசாங்கமாவது வழங்கியிருக்கிறதா?
ஆகவே பொதுவாகவே இலங்கை அரசியலில் பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்த அக் கறைகள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் எந்தக் கட்சியும் சரியாக நடந்து கொண்டதும் இல்லை. எதிர்க்கட்சிகள் கூட அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் தியாக எந்த உருப்படியான தீர்வும் கிடைத்ததில்லை என்பதே உண்மை.
இப்படிச் சொல்லி இந்த அரசாங்கத்தை நியாயப்படுத்த இங்கே நாம் முற்பட வில்லை. ஆனால், இதுதான் இலங்கை அரசியலின் வெட்கக்கேடான யதார்த்த நிலைமையாகவும் மரபாகவும் இருக்கிறது. இந்த மரபை மாற்றக்கூடிய அரசியற் போராட்டங்களை எந்த அரசியற் கட்சிகளாவது இதுவரையில் ஆக்கபூர்வமாக முன்னெடுத்திருக்கின்றனவா? அல்லது அதற்காக முயன்றிருக்கின்றனவா?
சுனாமி மீள் கட்டுமான நிதிப்பகிர்வில் விடுதலைப்புலிகளுக்கும் சந்திரிகா அரசாங் கத்துக்கும் இடையில் பிணக்கு வந்தபோது அதிக உதவிகளை வழங்கிய மேற்கு நாடு களே மௌனம் சாதித்தனவே தவிர, எத்தகைய அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்பதையும் இங்கே நாம் புரிந்து கொள்வது அவசியம்.
ஆகவே நண்பர் சொல்வதை நாம் நமது கவனத்திற் கொள்வது அவசியமாகிறது. அதா வது, நம்முடைய கைகளே நமக்கு உதவி என்பதே இங்குள்ள சேதி.
அரசாங்கம் மேம் போக்காகவோ சாட்டுக்காகவோ ஏதோ செய்யுமே தவிர, அர்த்தபூர்வ மாக எதையும் செய்யப்பபோவதில்லை. அதைவிட அரசாங்கத்திடம் பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டைச் செய்வதற்கான நிதியும் கிடையாது. மனம் கிடையாது. இதுவரையில் ஒரு பிரோரணையாவது மீள் குடியேற்றப்பிரச்சினைகளைப் பற்றி தனியாக விவாதிப்பதற்காக அக்கறையாகக் கொண்டு வரப்பட்டுள்ளதா?
எனவே இந்த விவகாரத்தில் நாம் தொடர்ந்தும் அரசாங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டி ருப்பதிலும் அரசாங்கத்தைக் கண்டித்துக் கொண்டிருப்பதிலும் எந்த அர்த்தமும் இல்லை. பதிலாக தமிழ் மக்கள்தான் உதவ முன்வரவேணும். அதுவும் காலத்தை இழுத்தடிக்காமல், காரணங்களையும் சாட்டுகளையும் சொல்லாமல் தமிழர்கள் உதவ வேண்டும்.
அரசாங்கத்தின் பொறுப்புகளை நாம் முழு மையாக எடுக்க முடியாது. அதேவேளை அப்படி எடுத்துக் கொண்டு அரசாங்கத்தைப் பொறுப்பிலிருந்து விடுவித்து விடவும் முடியாது.
இதுவொரு நெருக்கடியான நிலைமைதான். ஆனால், இப்போது தமிழர்கள் நெருக்கடி நிலைமைக்குள் இருக்கிறார்கள் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. தமிழர்களை வெற்றி கொண்டு விட்டதாகவே அரசாங்கம் சிங்கள அதிகார வர்க்கம் கருதிக் கொண்டிருக்கிறது.
சிங்களச் சாதாரணர்களைப் பொறுத்தவரை அவர்கள், தங்களுடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ளமுடியாமலே இருக்கிறார்கள். அவர்களை பாதிக்கப் பட்ட தமிழ் பேசும் மக்களுடன் ஒருங்கிணைக்கக் கூடிய அரசியல் வேலைத்திட்டத்தை தமிழ் பேசும் தரப்பிலிருந்தும் எவரும் முன் னெடுக்கவில்லை. சிங்களத்தரப்பிலிருந்தும் முன்னெடுக்கவில்லை.
எனவே இந்த நிலையில் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கான உத விகளை நிச்சயமாக தமிழர்களே செய்ய வேண்டியுள்ளது. காரணம், தமிழ்த் தேசியத் தின் பேராலும், அதன் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திலும் கடுமையாகப் பாதிக் கப்பட்டவர்கள் வன்னி மற்றும் வாகரை படுவான்கரைப் பிரதேச மக்களே!
இப்பொழுது இந்த மக்களுக்கே உதவிகள் தேவைப்படுகின்றன. அதுவும் அவசரமாக.
காலம் நீடித்தாலும் தாமதமாகினாலும் அத்தனை பாதிப்புகளையும் இந்த மக்களே தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதையே அந்த உதவி நிறுவனத்தின் பிரதி நிதியாக குறிப்பிட்ட நண்பர் சொன்னார்.
இப்படி அவர் சொல்லும்பொழுது, என்னுடைய ஞாபகத்துக்கு வருவது, ஆபத்துக்குத வாப் பிள்ளை, அரும்பசிக்குதவாத அன்னம், தாகத்துக்குதவாத் தண்ணீர்.... என்ற எங்கள் முன்னோரின் கவிதைதான்.
ஆபத்துக்கும் அவசியத்துக்கும் எதுவும் உதவவில்லை என்றால், எவரும் உதவ வில்லையென்றால் பின்னர், அந்த உதவியும் தேவையில்லை, அந்த உறவும் தேவையில்லை.
இன்னுமொன்றையும் நண்பர் சொல்கிறார்.
உதவும் அமைப்புகள் தங்கள் களஞ்சியங்களிலும் கணக்குகளிலும் எதையும் நிரப்பி வைத்திருப்பதையும் விட தேவைப்படும் மக்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவற்றை வழங்க வேண்டும் என்பது.
ஆகவே பொதுவாக வன்னி மக்களின் நிலைவரத்தையும் அவர்களுக்கான தேவைகள், உதவிகள் போன்றவற்றைச் செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் இந்த நண்பராலும் இந்தப் பத்தியினாலும் வலியுறு த்தப்படுகின்றன.
இதைவிடவும் வன்னி நிலைவரத்தைப் பற்றி பல்வேறு தரப்பினரும் ஊடகங்களும் தெளிவாகவே சொல்லியும் வெளிப்படுத்தியுள்ளன. எனவே வன்னி நிலைவரத்தைப் பற்றி இனியும் யாரும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. புதிதாக அதைப் படம் பிடித்துக் காட்டவும் வேண்டியதில்லை.
எல்லாம் எல்லோருக்கும் தெரியும்.
ஆகவே உதவும் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. இங்கேதான் பிரச்சினையே இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக இருந்தால், அது இலங்கை அரசாங்கத்தினூடாக அல்லவா நடைபெறும். பாதிப்பை ஏற்படுத்திய அரசா ங்கத்தை நாம் எப்படி நம்புவது என்று பல தமிழர்களும் கேட்கிறார்கள். அதிலும் குறிப் பாக புலம்பெயர்ந்திருக்கிற நண்பர்களே அதிகமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்.
அரசியலில் எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை என்பார்கள். இதை எதற்காகச் சொல்லியிருப்பார்கள் அறிஞர்கள்?
நிலைமைகள், சந்தர்ப்பங்கள், தேவைகள் என்று வந்து விட்டால், மக்களின் நன்மை கருதி, அதை நிறைவேற்றுவதற்காக தந்திரோபாய ரீதியாகவும் விழிப்போடும் எச்சரிக்கை யோடும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து, ஒரு பொறிறையை வகுத்துக் கொண்டு எதிர்த் தரப்புடன் செயற்படுவது என்பதே இங்கே அவசியமாகிறது. அது ஒரு குறிப்பிட்ட கால எல்லைவரையாக இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட விடயங்களின் அளவோடு மட்டுமாக இருக்கலாம். ஆனால், இதைச் செயற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், அது மக்களை மனங்கொண்ட செயற்பாடாக இருக்கும். அதுதான் ஒரு அரசியற் சக்தியின் பணியாகவும் திறனாகவும் இருக்கும்.
என்னதானிருந்தாலும் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், தொடரமுடியாது.
பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் நிறை வேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு அவர் கள் சீரழிந்து போகக் கூடாது. ஒரு சீரழிந்த மக்கள் தொகுதியை எதிர்ச் சக்திகள் அவற்றின் பலவீனமான நிலைமையைக் கருத்திற் கொண்டு பின்னர் கையாளத் தொடங்கி விடும்.
போர் முடிந்த பின்னர் உருவாகியிருக்கும் புதிய சூழலில் தமிழர் பகுதிகளில் முதலீடுகளையும் தொழிற்றுறைகளையும் ஆரம்பித்திருந்தால் இப்போது தெற்கே தமிழ் இளைஞர், யுவதிகள் வேலைக்காகக் கொண்டு செல்லப்படும் நிலைமைகள் ஏற்பட்டிருக்காது. தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள முதலாளிகளினதும் சிங்கள நிறுவனங்களினதும் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புக் கிடைத்திருக்காது.
இந்த விவகாரத்தை இந்தப் பத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னே சுட்டிக்காட்டிய யிருந்தது என்பதையும் இங்கே மீள நினைவுபடுத்த வேண்டும். ஏனெனில், அதற்குப் பின்னர், நிலைமைகளில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பத்தியில் சுட்டப்பட்டிருந்தபடியே பல காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
எனவே புலம் பெயர்ந்த மக்கள் இந்த இடத்தில் சற்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
அவர்கள்தான் பொருளாதார ரீதியில் ஓரளவுக்கு உதவக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
எந்த மக்களுக்காக அவர்கள் தெருக்களில் கொட்டும் பனியில் இறங்கிப் போராடினõர் களோ, அந்த மக்கள் இப்போது நெருப்புக்குள் நிற்கிறார்கள். ஆகவே அவர்களைக் காப்பாற்ற வேண்டும். எதிர்வரும் சில மாதங்களில் பருவமழை வரப்போகிறது.
முகாம்களில் இருந்தபோது எல்லாவற்றுக்கும் அரசாங்கமே பொறுப்பாக இருந்தது.
இப்போது அவரவர்களை அவரவர் ஊர்களில் மீளக் குடியமர்த்தி விட்டதாக அரசாங் கம் சொல்லிக் கொள்கிறது. இது நியாயமற்ற கூற்றுத்தான். ஆனால், இதைத் தட்டிக் கேட்டுச் சுட்டிக்காட்டி, அரசாங்கத்தை உதவும்படி செய்ய எந்தக் கொம்பர்களால் முடியும்?
ஆகவே யதார்த்தமாக இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சிந்தியுங்கள். உதவி தேவைப் படும் போதே அது உதவியாகிறது. அரசாங்கம் பகையா, எதிரா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து நிதானமாகச் சிந்தித்து ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
இந்த உதவிகளை சட்ட ரீதியாகவும் செய்யலாம். தனிப்பட்ட முறையிலும் செய்ய லாம். அப்படிப் பலரும் பல்வேறு உதவிகளை வன்னி மக்களுக்குச் செய்தும் வருகி றார்கள். ஆனால், இதை இன்னும் நாம் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக வன்னியில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்குப் பல புலம்பெயர் மக்கள் பல வகையான உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் அரசாங்கத்தைக் கேட்டா செய்தார்கள்? அல்லது அரசாங்கத்துடன் உடன் பட்டா செய்தார்கள்?
ஆகவே நிலைமைகள் எமக்கு நிர்ப்பந்தங்களை உருவாக்குகின்றன. அந்த நிர்ப்பந்தங் கள் எங்களுக்குப் புதிய வழிகளைக் கண்டு பிடிக்கத் தூண்டுகின்றன. ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழரும் தாம் இப்போதிருக்கும் நாடுகளுக்குச் செல்லும்பொழுதும் பட்ட பாடுகளும் சென்ற வழிகளும் எல்லோரும் அறிந்தவை. அதற்காக அவர்கள் கைக் கொண்ட தந்திரோபாயங்கள் யாராலும் நினைத்துப் பார்க்கவே முடியாதவை.
அதைப்போல அந்தந்த நாடுகளில் நிரந்தரக் குடியுமையைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட காயங்களும் அதற்குக் கையாண்ட வழிறைகளும் எங்களுக்குத் துணை யனுபவங்களாக இருக்கின்றன.
எனவே பிய்த்து உதறி விடுவதைப் போல காரியங்களைச் செய்யத் துவங்க வேண் டியதுதான். இதேமாதிரி உதவும் பொறுப்பு தனியே புலம் பெயகளுக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவில் இருக்கும் ஏனையோருக்கும் உண்டு.
உடுக்கை இழந்த போதே மறுகையை வழங்க வேண்டும். அதுவே காலத்தாற் சிறந்த உதவியும் பணியுமாகும்.
கிருஷ்ணமூர்த்தி
வீரகேசரி



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக