வியாழன், 7 அக்டோபர், 2010

மின்சாரம் செலுத்தி கைதி சித்ரவதை (படங்கள் இணைப்பு)

ஆஸ்திரேலியாவில் விசாரணை கைதி ஒருவர் மீது 13 முறை மின்சார துப்பாக்கி மூலம் மின்சாரம் செலுத்தி சித்திரவதை செய்த சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

ஆஸ்திரேலியாவில் 2008ம் ஆண்டு பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் போலீசார் ஆயுத சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு ஒத்துழைப்பு தராத ஒருவரை போலீசார் பிடித்து, பெர்த் போலீஸ் நிலைய சிறையில் அடைத்தனர்.

விசாரணையின்போது, அந்த நபரை 9 போலீசார் சூழந்து கொண்டு மின்சார துப்பாக்கி மூலம் 13 முறை மின்சாரம் செலுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.

 சித்திரவதைக்கு உள்ளான நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. சிறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இக்காட்சிகள் அப்படியே பதிவானது. தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல், போலீசாரின் நன்மதிப்பு குறைந்து விட்டது என்று அரசு அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.  ‘இதுபோன்ற கருவிகளை பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது’ என்று அந்நாட்டின் அட்டார்னி ஜெனரல் கூறியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல