வியாழன், 7 அக்டோபர், 2010

சவுதி இளவரசர் ஓரினச்சேர்க்கையாளரா (Gay) ? (படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு)

பணியாளரை தாக்கி கொன்ற சவுதி இளவரசர் பிரித்தானிய நீதிமன்றில் - பாலியல் ரீதியான தாக்குதலென சந்தேகம்

தனது ஆண் பணியாளரை பாலியல் ரீதியில் தாக்கி படு கொலை செய்த குற்றச்சாட்டில் சவூதி இளவரசர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பன்டர் அப்துல்லாஹ் (இடது) இளவரசர் (வலது)
மத்திய லண்டனிலுள்ள ஹோட்டலிலுள்ள அறையில் பன்டர் அப்துல்லாஹ் அப் துல்லாஸிஸ் (32 வயது) என்ற தனது ஆண் பணியாளரை பாலியல் ரீதியில் அணுகி, அவரை அடித்து கழுத்தைத் திருகி கொன்றதாக சவூதியின் அரச குடும்பத்தைச் சேர்ந்த சௌத் பின் அப்துல்லாஸிஸ் பின் நஸீர் அல் சௌத் மீது (34 வயது) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது லண்டனிலுள்ள அந் நாட்டின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

ஹோட்டலில் இளவரசன் கட்டிலிலேயே பன்டர் அப்துல்லாஹ் சடலமாக மீட்கப்பட்டார்.

இதன்போது இளவரசர், பன்டர் மரணமடைவதற்கு 3 வாரங்களுக்கு முன் தனது பணியாளர் தாக்கப்பட்டு களவுக்குள்ளானதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பன்டரின் கன்னத்தில் காணப்பட்ட கடிகாயங்கள் அவர் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தை தோற்றுவித்து ள்ளன.

தனது பணியாளரை கொன்றதை ஒப்புக் கொண்ட இளவரசர், தான் பன்டருடன் நட்பு ரீதியில் பழகி வந்ததாகவும் தான் ஒரு தன்னின சேர்க்கையாளர் அல்ல எனவும் வாதிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பன்டரை இளவரசர் தாக்கிய காட்சிகள் ஹோட்டலிலுள்ள “சிசிரிவி' கண் காணிப்பு வீடியோ கருவியில் பதிவாகியுள்ளன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல