மேலும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கொழும்புக்கு 10 மில்லியன் ரூபா, கம்பஹாவிக்கு 5 மில்லியன் ரூபா மற்றும் களுத்தறையிக்கு 5 மில்லியன் ரூபா என பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கும், அமைச்சு உத்தியோகத்தர்களுக்கும் பாதிப்புக்குள்ளானவர்கள் குறைப்பாடுகளை தீர்க்கும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தங்கும் இடவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணியில் ஹெலிஹொப்டர்கள்
இலங்கை விமானப்படை, பெல் 212 ரக ஹெலிஹொப்டர்கள் கொழும்பு - கண்டி வீதி, பாணந்துறை, களுத்தறை சுற்று வட்டாரம் ஆகிய பிரதேசங்களில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக