வியாழன், 11 நவம்பர், 2010

யாழில் இளம் பெண்ணுக்கு எயிட்ஸ் - அதிர்ச்சியில் யாழ்.போதனா வைத்தியசாலை!

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் இருபது வயதுடைய இளம் யுவதி ஒருவருக்கு எச்.ஐ.வி. எயிட்ஸ் தொற்று இருப்பது நேற்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளது.இருபது வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இனங் காணப்பட்டிருப்பது பேராபத்து என யாழ். போதனா வைத்தியசாலை அதிர்ச்சியடைந்துள்ளது.


பங்கசு தொற்றுக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட இவ் யுவதி யின் நோய் அறிகுறிகளை வைத்து அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருக்கலாம் என அந்த விடுதியின் வைத் திய நிபுணர் தீர்மானித்தார்.இதையடுத்து கிளினிக்கல் முறையில் இரத்தப் பரிசோதனை செய்யப்பட்ட வேளை, எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கு மேலாக கொழும்பில் எச்.ஐ.வி. தொற்றை உறுதி செய்வதற் கான இறுதி இரத்தப் பரிசோதனை ஒன்றை மேற் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக யாழ். போதனா வைத் தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும் கிளினிக்கல் முறையி லான இரத்தப் பரிசோதனையில் எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், கொழும்பில் செய் யப்படும் இரத்தப் பரிசோதனையில் 0.1 வீதமே எச்.ஐ.வி. தொற்று இல்லா மல் இருப்பதற்காக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வெளிநாட்டுத் தொடர்பு எதுவும் இல்லாத இருபது வயதுடைய இளம் யுவதிக்கு எச்.ஐ.வி. தொற்று இனங் காணப்பட்டிருப்பது பேராபத்தான விடயம் எனவும் குறித்த யுவதிக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதற் கான காரணத்தை அறிவதற்கு வேண்டிய தகவல்களை வழங்க அவர் மறுத்துவருவதனால் யாழ். போதனா வைத்தியசாலையால் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க முடியாதிருப்பதாகவும் தெரியவரு கின்றது. இருபது வயதுடைய இளம் யுவதிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப் பது இனங்காணப்பட்ட நிலையில், 16 வயதில் அவருக்கு இத் தொற்று ஏற் பட்டிருக்கலாம் என யாழ்.போதனா வைத்தியசாலை ஊகித்திருப்பதானது ஆபத்தான விடயம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல