வியாழன், 11 நவம்பர், 2010

தீர்த்தத்தில் நீராடிய மாணவன் உயிரிழப்பு

நல்லூர் கந்தன் ஆலயத் தீர்த் தக் கேணியில் நீராடிய மாணவன் ஒருவர் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்தார்.நேற்றுமாலை இடம் பெற்ற இத் துயர சம்பவத்தில் கந்தர் மடம் பழம் வீதியை சேர்ந்தவரும் கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலய மாண வனுமாகிய தர்மகுலசிங்கம் கனிஷ்டன் வயது 14 என்பவரே உயிரிழந்த வராவார்.

நேற்று மாலை ஆலய வெளி வீதியில் சூரன் போர் நடந்து கொண் டிருந்த வேளை இத் துயரச்சம்பவம் இடம் பெற்றது.தீர்த்தக் கேணியில் குளித்துக் கொண்டிருந்த பிரஸ்தாப மாணவன் திடீரெனக் காணாமல்போக அவரைத் தேடிய போது நீரில் மூழ்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டு உடனடியாக யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அவர் அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடந்த இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல