கையடக்க தொலைபேசி ஆபாச இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் இருந்த 3 பெண்களை இனங்கண்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் சமர்ப்பித்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் ஆபாச படங்களில் காணப்பட்ட 83 பேரின் புகைப்படங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கபட்டதன் மூலம் இவர்கள் மூவரும் இனம் காணப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை கைது செய்வது தொடர்பில் பொதுமக்களின் உதவி அவசியம் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சமீப காலங்களில் 180 க்கு மேற்ப்பட்ட இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் காணப்பபட்ட புகைப்படங்களை கொண்டு, அவற்றில் உள்ளவர்களை கைது செய்து முற்றிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை இல்லாதொழிக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வியாழன், 11 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக