அவர் மேலும் கூறியதாவது. தமிழ் மக்களின் நிலங்களை பறிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமே நாவற்குழி மீள்குடி யமர்வு. எந்தவித ஆவணங்களும் இன்றி யாழ்ப்பாணத்துக்கு வந்த சிங்கள மக்கள். தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த நிலத்தில் குடியமர்த் தப்பட்டுள்ளனர். தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற நிலை யிலேயே, இந்த குடியமர்த்தல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்மக்களை விரக்திய டையவைத்து அவர்கள் சமாதானத்தை விரும் பவில்லை என்பதை உலகுக்கு காட்டி தமிழ் மக்களை நசுக்குவதற்கே அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருகிறது.
யுத்தத்தால் இடம் பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாதி அரசு தமிழ் மக்களின் நிலங்களைப் பறித்து அதில் சிங்களமக்களை குடியமர்த்தி வருகிறது. இது தொடர்பில் தமிழ்மக்கள் விழிப்படைய வேண்டும். தூரநோக்குடன் செயற்பட வேண் டும். இல்லை எனில் தமிழ்மக்கள் நிர்க்கதியான நிலையிலேயே இருக்க வேண்டும் என அவர் கூறினார். இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டமைப்பு பேசும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச அதிபருக்கு அறிவிப்பு இல்லை
நாவற்குழிப் பகுதியில் சிங்கள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப் பட்ட சம்பவம் தனக்கு எதுவும் அறி விக்கப்படவில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகு மார் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அதிகாரசபை யின் காணிகளில் நாவற்குழியில் 32 குடும் பங்கள் மீள் குடியமர்த்தப்பட்டதாக அறிந் துள்ளேன். எனினும் அவர்கள் மீள்குடியேற்றுவதற்கு முன்னர் எனக்கு எதுவித அறிவித்த லும் விடுக்கவில்லை என்றார்.
இதேவேளை நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமை தொடர்பில் அப்பகுதி கிராமசேவையாளர் தனக்கு நேற்றே அறிவித்த தாக சாவகச்சேரிப் பிரதேசசெயலர் தெரிவித்தார்.இது குறித்து தான் அரச அதிபருக்கு தகவல் தெரிவித்ததாகவும் சிங்கள மக்களின் குடியமர்பு குறித்து தனக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லைஎனவும் அவர் கூறினார்.
சிங்கள மக்களை குடியேற்றுவதில் திட்டமிட்டு செயற்படுகிறது அரசு - சந்திரகுமார் எம்.பி. குற்றச்சாட்டு
யாழ்.மாவட்டத்தில் சிங்கள மக் களை குடியமர்த்துவது திட்டமிட்டு செய்யப்படுவதாக அரசாங்கத்தின் மீது சந்தேகம் ஏற்பட வைக்கின்றது. எனவே ஒரு இணக்கப்பாடு அடிப் படையில் உடனடியாக அதனை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றோம் என நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. நாவற்குழி குடியேற்றத்திட்டத்தில் சிங்கள மக் கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இச் செயலானது அரசாங்கத் தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப் படுகின்றதா என சந்தேகம் கொள்ள வைக்கின்றது. இவ்வாறான செயல் மீண்டுமொரு பதற்றமான சூழலை ஏற் படுத்தும். யாழ்.மாவட்டத்தில் பூர்வீகமாகவுள்ளவர் களில் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங் குவதற்கே அரச காணிகள் இல்லாத நிலையுள்ளது.
அதைவிட அரச நிறுவனங்களை அமைப் பதற்கு தனியாரிடம் காணிகள் குத்தகைக்குப் பெறப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிலையில் சிங்கள மக் களை குடியமர்த்துவது திட்டமிட்ட செயல் என் பதை அரசின்மீது சந்தேகத்தை ஏற்படுத்து கின்றது. அதேபோன்று 1956 ஆம் ஆண்டிலி ருந்து தென் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களால் வடக்குக் கிழக்குச் சென்ற தமிழ் மக்கள் மீண்டும் தெற்குக்கு வந்து நிலங்க ளைக் கேட்டால் அரசு வழங்குமா?
எனவே இச் செயலை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபி விருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலை மையில் ஈ.பி. டி.பி கட்சியின் உறுப்பினர்கள் இன்று நண்பகல் ஜனாதிபதியை சந்திப்போம் என்று நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக