வரும் ஆனா வராது என்பதன் பொருள் அறி யா வடிவேலு வாடகைக் காரில் ஏறிக் கொள்ள, மாலைப் பொழுதில் சாரதியின் கண் மறைப்பு பாரிய விபத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதிலிருந்து வரும் ஆனா வராது என்பது மிகப் பெரும் நகைச்சுவைக்குரிய சொற்றொடரா கிற்று.
இந்த நகைச்சுவை இலங்கையின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைக்கும் சாலப் பொருந்தும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினா லும் அது நடக்காதென்பதே நிஜம். பேச்சுவார்த்தை என்பது இப்போது தமிழ் மக்களை சாந்தப்படுத்தும் வார்த்தையாகி விட்டது.
அரசியல் புலத்தில் பல்வேறு வியாக்கியா னங்கள் எழுகின்ற போதெல்லாம், பேச்சுவார்த் தைக்கான நடவடிக்கைகள் நடைபெறுவது போன்ற காட்டாப்பு.இந்தக் காட்டாப்பை அப்பாவித் தமிழர்கள் நம்பி விடுவார்கள்.இதைவிட மிகவும் அப்பாவித்தனமான தமிழ் அரசியல்வாதிகளும் பேச்சுவார்த்தை நடக்கப் போகின்றது. ஒரு மாதிரியாக இனப்பிரச்சினைக் குத் தீர்வு கண்டு விட்டால் எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விடும் என்று நம்புகின்றனர்.
என்ன செய்வது! பேச்சுவார்த்தை நடக்கும் ஆனா நடக்காது என்பது நிஜமாக இருக்கும் நிலையில், பேச்சுவார்த்தையை நம்பி உற்சாகத் தை இழந்து போவதைத் தவிர வேறு எதுவும் நடக்க மாட்டா. இலங்கை அரசைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயங்களில் பேச்சுவார்த்தை என்ற கொடியை தூக்கி உயர்த்தும்.
என்ன நோக்கத்திற்காக பேச்சுவார்த்தை கொடி உயர்த்தப்பட்டுள்ளதென்பதை புரிந்து கொள்ளாத நம் அரசியல் தலைமைகள் பேச்சுவார்த்தை நடக் கும் என நம்பி சர்வதேச அழுத்தத்திற்கு தூண் டுதல் போடாமல்அமைதி கொள்ளும். இந்த நிலைமையையே கடந்த காலங்களிலும் அனுபவித்துள்ளோம். என்ன செய்வது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதைவிட எங்களால் தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும், அரசுடன் இணைந்துள்ள தமிழ்த் தரப்புகளும் போட்டி போடும்போது, அரசின் சிந் தனை வேறு எங்கோ உள்ளது. அட! எங்கள் இனத் தின் குருதியில் கலந்து கொண்ட ஒற்றுமையீனம் எங்களை ஒருபோதும் உய்ய விடாதுபோலும்.
வலம்புரி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக