ஞாயிறு, 28 நவம்பர், 2010

மாணவிகள் எழுதிய வாசகம் மெக்சிகோவில் பரபரப்பு

நாளை மக்கள் படுகொலை நடக்கும் என்று 4 பள்ளி மாணவிகள் விளையாட்டாக எழுதி வைத்த வாசகம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.

சிகாகுவா மாநில சியுதத் அல்டமா நகரில் உள்ள வங்கியின் முன் சுவற்றில் எச்சரிக்கை விடும் தொணியில், நாளை மிகப்பெரிய மனித படுகொலை நகரில் நடக்கும் என்று எழுதப்பட்டு இருந்தது. இந்த வாசகத்தால் நகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அத்துடன் வேலைக்கு செல்வோர் வீட்டில் முடங்கினர். இது தொடர்பாக விசாரணை செய்ததில், அந்த வாசகத்தை 4 மாணவிகள் குறும்புத்தனமாக எழுதியது தெரியவந்தது. பின்னர் அவர்களுக்கு ஏதாவது மனநல பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகித்து, அதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது. சிகாகுவாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 2,800 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதனாலே அங்கு அதிக பரபரப்பு தொற்றிக் கொண்டது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல