ஞாயிறு, 5 டிசம்பர், 2010

20 ஆண்டுக்கு முன்பு பலியானவர் சடலம் மீட்பு

பொலிவியா நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் பலியான விமான ஓட்டியின் பிணம் மீட்கப்பட்டது. பொலிவியா நாட்டில் கடந்த 1990, அக்டோபர் 19ம் தேதி பெனி என்ற இடத்தில் இருந்து லா பாஸ் என்ற இடத்திற்கு விமானத்தில் மாமிசம் கொண்டு செல்லப்பட்டது. விமானத்தை பெஞ்சமின் பபோன் காலிண்டோ ஓட்டி சென்றார்.

பனி படர்ந்த மலைப்பகுதியில் செல்லும் போது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமானம் மலையின் மீது மோதி, வெடித்து சிதறியது. 7 ஆண்டுகளுக்கு பின்னர் இவருடன் சென்ற மற்றொரு விமான ஓட்டியின் பிணம் மட்டும் கைப்பற்றப்பட்டது. பெஞ்சமின் குடும்பத்தினர் தொடர்ந்து இவரது பிணத்தை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 10.11.2010 அன்று இவரது பிணம் விமான ஓட்டியின் இருக்கையில் இருந்து மீட்கப்பட்டது. பனி படர்ந்த மலை என்பதால் பிணம் அழுகாமல் இருந்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல