ஞாயிறு, 5 டிசம்பர், 2010

நோபல் பரிசு பெற்றவர் பற்றிய சினிமா

ஏழை மக்கள் வியாபாரம் செய்வதற்காக குறுங்கடன்களை அளிக்கும் திட்டத்தை வங்கி மூலம் தொடங்கியவர் முகமது யுனுஸ். இந்த திட்டம் மூலம் வங்காளதேசத்தில் லட்சக்கணக்கான ஏழைப்பெண்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர காரணமாக இருந்தவர். இதனால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இவரை பற்றிய சினிமா படத்தை தயாரிக்க இத்தாலிய சினிமா டைரக்டர் மார்க்கோ அமெண்டா திட்டமிட்டு இருக்கிறார். மார்க்கோ உருவாக்கிய சிசிலியன் கேர்ள் என்ற படம் சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அவர் அடுத்து உருவாக்கும் படம் பேங்கர் டு த புவர்( ஏழைகளுக்கான வங்கி தலைவர்) என்பது தான். முகமது யுனுஸ் வாழ்க்கையை அடித்தளமாக கொண்ட இந்த படத்தை அவர் இந்தியாவில் படமாக்க இருக்கிறார். இந்தியா, வங்காளதேசம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இது படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக அவர் நல்ல இந்திய நடிகர்களை தேடி வருகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல