ஞாயிறு, 5 டிசம்பர், 2010

20 வயது இந்திய அழகி பூலோக அழகியாக வெற்றி

வியட்னாமில் நடந்த கோலாகல நிகழ்ச்சியில், இந்திய அழகி நிகோலே பாரியா பூலோக அழகியாக வெற்றி பெற்றார்.

வியட்னாமில் கோலாகல விழா

வியட்னாம் நாட்டில் உள்ள வின்பெர்ல் தீவில் நேற்று மாலை, 2010-ம் ஆண்டுக்கான பூலோக அழகி போட்டி நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து வந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் மேடையில் தோன்றி, அணிவகுத்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

பெங்களூர் பெண் வெற்றி

இந்த போட்டியில் பூலோக அழகியாக பெங்களூரை சேர்ந்த 20 வயது அழகி நிகோலே பாரியா வெற்றி பெற்றார். அவர் அறிவு போட்டியிலும் வெற்றி பெற்றார்.

அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

வெற்றி-தோல்வி நோக்கம் அல்ல

முன்னதாக நடந்த அறிவு போட்டியில், நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் நிகோலே பாரியா பதில்களை அளித்தார்.

"எந்த போட்டியிலும் வெற்றி-தோல்வி பற்றி சிந்திக்கக் கூடாது. சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்படுவதே வெற்றிக்கு வழிகாட்டும்'' என்று அவர் பதில் அளித்தார்.

மற்றொரு கேள்விக்கு நிகோலே பதில் அளிக்கையில், "வியட்னாமில் இருப்பதை நான் பெருமையாக கொள்கிறேன். வியட்னாம் மிகவும் அழகான நாடு. இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றும் அவர் கூறினார்.

தந்தை மகிழ்ச்சி

இதுபற்றி பெங்களூரில் உள்ள நிகோலேயின் தந்தை இயான் பாரியாவிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் மகிழ்ச்சியுடன், "எனது மகள் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தேன். அதன்படி அவர் தனது திறமையை காட்டி விட்டார்'' என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல