இதற்காக 9 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குண்டுக் குழந்தைகள் சுமார் 20 ஆயிரம் பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களது உயரம், எடை, கொழுப்பு அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. 15 அல்லது 16 வயதுக்குள்ளாகவே இதய நோய்களால் பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு அவர்களது உடலில் கொழுப்பு அளவு இருந்தது. மேலும் வேறு பல பாதிப்புகளுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியும் அவர்களிடம் தெரிந்தது.
ஆய்வில் தெரியவந்தது பற்றி டெபி லாரல் கூறியதாவது:
உடல் பருமன் அனைவருக்குமே ஆபத்துதான். குறிப்பாக குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
9 வயதில் குண்டாகி 15 வயது வரை எடை குறையவில்லை என்றால் இதய நோய் உள்பட 9 வகையான பாதிப்புகள் ஏற்படும். உயர்ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு அதிகரித்தல், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு என்று ஆரம்பித்து இதய நோயாக மாற சாத்தியக்கூறுகள் அதிகம்.
தேவையான அளவுக்கு டிவி பார்ப்பது, நொறுக்குத் தீனிகளை குறைத்து ஆரோக்கியமான காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிடுவது, வீடியோகேம் குறைத்து ஓடியாடி விளையாடுவது என்று இருந்தால் குழந்தைகள் வெயிட் போட மாட்டார்கள். பரம்பரை குண்டு என்றாலும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மூலமாக இந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக