ஞாயிறு, 5 டிசம்பர், 2010

உதட்டு அசைவை ஒலி வடிவில் மாற்றும் கையடக்கத் தொலைபேசிகள்

பொது இடங்களில் கையடக்கத் தொலைபேசிகளில் சத்தமாக பேசுவதால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஜேர்மனியைச் சேர்ந்த நிறுவனமொன்று புதிய தொழில்நுட்பமொன்றை கண்டு பிடித்துள்ளது.

“ஸ்ரூகி' என்ற இந்த நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மென்பொருள் தொழில்நுட்பமானது, கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் தாம் கூற விரும்புபவற்றை உதட்டசைவில் கூறினால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை எதிர்முனையில் உள்ளவர்களுக்கு குரல் வடிவில் தெரிவிக்கும். “எலெக்ட்ரோ மயோகிராபி' என்றழைக்கப்படும் மேற்படி தொழில்நுட்பம், ஒருவரது முகத்தில் உதடுகள் மற்றும் தாடைப் பகுதியில் பொருத்தப்படும் உணர்கருவிகள் மூலம் உதடுகள் மற்றும் முக அசைவை உள்வாங்கி, அவற்றை வார்த்தைகளாக மாற்றுகிறது.

பின் இந்த வார்த்தைகள் எதிர்முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. அது தவிரவும் இந்த உதட்டசைவுகளை குரல் வடிவில் ஒலி பெருக்கிக் கருவிகள் மூலம் கேட்கலாம்.

இந்த கண்டுபிடிப்பானது பேச்சாற்றலை இழந்தவர்கள் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டவர்கள் ஆகியோருக்கு வரப்பிரசாதமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல