வெள்ளி, 14 ஜனவரி, 2011

புதுமணப் பெண் மொரிஷியஸ் தீவு ஆடம்பர ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு

ஹோட்டல் அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட அயர்லாந்து அழகுராணிகளில் ஒருவரும் ஆசிரியையுமான மிசேலா மக்எரியவி (27 வயது) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் வட அயர்லாந்தின் முன்னணி உதைப்பந்தாட்ட முகாமையாளர்களில் ஒருவரான மிக்கி ஹார்ட்டின் மகளாவார்.


மிசேலா மக்எரியவிக்கும் அவரது கணவரான ஜோன் மக்எரியவிக்கும் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்றதற்கு மறுநாள் மேற்படி ஜோடி தேனிலவுக்காக மொரிஷியஸ் தீவுக்கு புறப்பட்டனர்.

அவர்கள் மொரிஷியஸ் தீவிலுள்ள நான்கு நட்சத்திர லெஜென்ட்ஸ் ஹோட்டலில் தங்கினர். சம்பவதினம் மிசேலாவும் ஜோனும் ஹோட்டல் உணவகத்தில் தேநீர் அருந்த தயாரான வேளை, தேநீருடன் உண்பதற்காக பிஸ்கட்டுகளை எடுத்து வருவதற்கு மிசேலா மட்டும் அறைக்குச் சென்றுள்ளார்.

மிசேலா நெடு நேரமாகியும் உணவகத்துக்கு திரும்பாததால் ஜோன் திகைப்படைந்து அறைக்கு சென்றபோது, அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஹோட்டல் அறையில் மிசேலா சடலமாக காணப்பட்டார்.

இலத்திரனியல் திறப்பொன்றை பயன்படுத்தி மேற்படி ஜோடி தங்கியிருந்த அறைக்குள் கொள்ளையிடும் முகமாக நுழைந்த ஒருவரோ அன்றி ஒரு குழுவினரோ, எதிர்பாராத வகையில் அறைக்குள் நுழைந்த மிசேலாவை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த படுகொலை சம்பந்தமாக செவ்வாய்க்கிழமை சந்தேகத்தின் பேரில் அறு வரை கைதுசெய்த பொலிஸார், அவர்களை தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல