வெள்ளி, 14 ஜனவரி, 2011

இஸ்ரேலுக்கு சென்ற கோத்தாபய கடுமையான அசௌகரியத்தை சந்தித்ததார்!

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்புச் செயலாளர் நேற்று இஸ்ரேலுக்கு சென்ற போது, அவரை முக்கிய விருந்தினராக கருதாது சோதனைக்கு உட்படுத்தியதால், அவர் மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளானதாக தெரியவருகிறது.

ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் சென்ற கோத்தபாய ராஜபக்ஷ, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ள பொன் கூரியன் விமான நிலையத்தை நேற்று சென்றடைந்தார். முக்கியஸ்தர்கள் செல்லும் வீ.வீ.ஜ.பிக்கள் வெளியேறும் வழியாக அவர் வெளியேற முயன்ற போதிலும் இஸ்ரேல் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் சாதாரண பயணிகளை போல் சகல பரிசோதனைகளும் நடத்தப்பட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவரும் முன்னாள் விமானப் படைத் தளபதியுமான டொனால்ட் பெரேராவின் முன்கூடிய ஏற்பாடுகளில் காணப்பட்ட தவறுகளே பாதுகாப்புச் செயலாளர் அசௌகரியத்திற்கு உள்ளாக காரணம் என இஸ்ரேலில் உள்ள இலங்கையர் சங்கத்தினர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

தூதரக பணிகள் தொடர்பில் அனுபமில்லாத காரணத்தினால் அவர் இந்த தவறை செய்துள்ளதாகவும் அந்த கடித்தில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் சென்றுள்ள கோத்தபாய, அங்கிருந்து அமெரிக்கா சென்று, அதன் பின்னர், இலங்கை திரும்பவுள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல