வெள்ளி, 14 ஜனவரி, 2011

தம்பியின் உயிரைக் காப்பாற்ற தனதுயிரை பறிகொடுத்த அண்ணன்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தம்பியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளான்.

ஜோர்டன் ரைஸ் என்ற 13 வயதான அச்சிறுவன், தனது தாயார் மற்றும் 10 வயதான சகோதரனுடன் காரில் பயணம் செய்துள்ளான்.

கார் இடை நடுவே வெள்ளத்தில் நிற்கவே உடனே அவசர உதவிச் சேவைக்கு அழைப்பினை மேற்கொண்டு இவர்கள் மூவரும் காரின் மேலே உட்கார்ந்துள்ளனர். உடனே இவர்களை சிலர் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

இதன் போது முதலில் ஜோர்டனை காப்பாற்ற அவர்கள் முயன்ற போது அவன் தனது தம்பியைக் காப்பாற்றும்படிக் கூறியுள்ளார்.

அவர்கள் தம்பியை ஒருவாறு காப்பாற்றியதன் பின்னர் ஜோர்டனையும் அவனது தாயாரையும் காப்பாற்ற முற்பட்ட போது வெள்ளத்தின் வேகம் அதிகரிக்கவே கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி சம்பவமானது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சிறுவனின் தந்தை தனது மகனை நினைத்து பெருமையடைவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல