வெள்ளி, 14 ஜனவரி, 2011

ஷரியன் தனது மனைவியை ஒரு நாயை விடவும் மோசமாக துன்பப்பட வைத்துள்ளார்

தென் ஆபிரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட மணமகளின் சித்தப்பா இந்திய வம்சாவளி பிரித்தானிய கோடீஸ்வரரான ஷரியன் தேவானி தனது மனைவி அன்னியை ஒரு நாயை விடவும் மோசமான முறையில் துன்பப்பட அனுமதித்துள்ளதாக அன்னியின் சித்தப்பாவான அசோக் ஹின்டோசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற போது தமது காரை வழிமறித்து ஏறிய துப்பாக்கிதாரிகள் இருவர், தன்னை வெளியே தள்ளிவிட்டு அன்னியை கடத்திச் சென்று படுகொலை செய்ததாக ஷரியன் தேவானி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அன்னியைப் போன்ற அழகிய பெண்ணை துப்பாக்கியுடன் இருவர் கடத்திச் செல்கிறார்கள் என்றால், அவர்கள் அவரை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமான விடயமல்ல'' எனத் தெரிவித்த அசோக் ஹின்டோசா, “எனது நாய்க்கு கூட இத்தகைய ஒன்று நடைபெற ஒருபோதும் நான் அனுமதித்திருக்கமாட்டேன். அவர் (ஷரியன்) துப்பாக்கிதாரிகளை தாக்கி அன்னியை காப்பாற்ற சிறிதாவது முயற்சித்திருக்கலாம்'' என்று கூறினார்.

துப்பாக்கிதாரிகள் தன்னை கார் ஜன்னலினூடாக வெளியே தள்ளியதாக ஷரியன் தெரிவித்ததாக கூறிய அசோக் ஹின்டோசா, ““சுமார் 6 அடி உயரமான அவர் தன்னை விடவும் சிறிய தோற்றடைய துப்பாக்கிதாரிகள் காரின் சிறிய ஜன்னலூடாக தன்னை வெளியே தள்ளும் வரை என்ன செய்தார்?'' என கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இறப்பதற்கு முன் அன்னி தனது மைத்துனிக்கு அனுப்பி வைத்த கையடக்கத் தொலைபேசி செய்தியில், அழுவதே தனது பொழுதுபோக்காக மாறி விட்டதாக தெரிவித்திருந்தமை குறித்தும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
“ஷரியனும் அன்னியும் மகிழ்ச்சிகரமான தம்பதிகளாக இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது'' என அவர் மேலும் தெரிவித்தார்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல