வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தனது 3 பிள்ளைகளை நிர்வாணமாக உணவோ நீரோ இன்றி சிறை வைத்த தாய்

தனது 3 பிள்ளைகளையும் ஆடைகளோ உணவோ குடி நீரோ இன்றி எதுவித வசதியுமற்ற அறையில் சிறை வைத்த தாயொருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கேட்ஷெட் எனும் இடத்தில் வசித்து வந்த சிறிது மனநலப் பாதிப்புக்கு உள்ளான டானியலே ஹெண்டர்ஸன் (28 வயது) என்ற இந்தப் பெண், தனது 3 பிள்ளைகளையும் மாடி அறையொன்றில் அடைத்து வைத்துள்ளார்.

இதன்போது மூத்த பிள்ளையைத் தவிர ஏனைய இரு பிள்ளைகளும் நிர்வாணமாக இருந்துள்ளனர். பிள்ளைகளை சிறை வைத்த அறையில் படுக்கை களோ மலசலகூட வசதியோ இருக்கவில்லை.

இந்நிலையில் சிறுவர்கள் அங்கிருந்த வாளியொன்றில் சிறு நீர், மலத்தை கழித்து தரையில் படுத்துறங்கியுள்ளனர்.

காலையில் மட்டும் அவர்களுக்கு “சான்ட்விச்' உணவு வழங்கப்பட்டுள்ளது.

வேறுவழி தெரியாது சிறுவர்கள் அறையின் ஜன்னலைப் பிடித்து தொங்கியபடி உதவிக்காக கூச்சலிட்டுள்ளனர்.

இதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, டானியலே ஹெண்டர்ஸன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நியூ காஸல் கிறவுண் நீதிமன்ற நீதிபதி, டானியலே ஹெண்டர்ஸனுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல