வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

எதுவித பாதுகாப்பும் இன்றி 9,908 அடி உயரத்தில் சாதனை (படங்கள் இணைப்பு)

சுவிட்ஸர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 9,908 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி இணைப்பில் நடந்து பிரெடி நொக் என்பவர் புதிய சாதனை படைத்துள்ளார்.


சென் மொட்ஸ் மலைப் பிராந்தியத்தில் கொர்வாட்ஸ்ச் மலையில் “கேபிள் கார்' வாகனப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பியில் எதுவித பாதுகாப்புமின்றி பிரெடி நொக் (45 வயது) நடந்து இந்த துணிகர சாதனையை நிறை வேற்றியுள்ளார்.
சாகஸ நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றும் அவர் சமநிலைக்கு உதவும் தடியை மட்டுமே பயன்படுத்தி 1600 மீற்றர் நீளமான இந்த கீழ் நோக்கிச் செல்லும் கம்பி இணைப்பில் நடந்து அவர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இணைப்பு கம்பியின் ஆரம்பப் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 10,836 அடி உயரத்தில் உள்ளது.

பிரெடி நொக் தனது 4 ஆவது வயது தொடக்கமே அந்தரத்தில் நடக்கும் திறமையை பெற்றிருந்தார்.

அவர் ஏற்கனவே இந்த வருட ஆரம்பத்தில் சுவிட்ஸர்லாந்து மலையிலான சாதனையை நிறைவேற்றத் திட்டமிட்டிருந்த போதும், சீரற்ற காலநிலை காரணமாக அவரது திட்டம் பிற்போடப்பட்டது.






Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல