வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

விபரீதங்களை ஏற்படுத்தும் தூக்கத்தில் நடக்கும் பழக்கம்

நம்மில் சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பல்வேறு விபரீதங்கள் நடப்பதுமுண்டு.

சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்.

தூக்கத்தில் நடப்பதற்கு குடும்ப மரபணுவியல் சம்பந்தமான காரணங்கள்கூட இருக்கலாம். ஆனால் பெரியவர்களைவிட குழந்தைங் கதான் பெரும்பாலும் தூக்கத்துல நடப்பார்களாம். அதுக்குக் காரணம், குழந்தைகள் தூங்கும்போது, மெதுவான அலை தூக்கம் (low-wave sleep) அதாவது ‘ஆழமான அதிவேக விழி அசைவுகளி ல்லாத தூக்க நிலையில் இருப்பார்களாம். இந்த நிலையில்தான் தூக்கத்தில் நடக்கிற செயலே தொடங்குகி றது என்கிறது ஆய்வு முடிவுகள்.

இது தவிர்த்த சரியான தூக்கமின்மை,

காய்ச்சல், மன உளைச்சல் சில ஊக்கமருந்துகள் என்பவற்றாலும் தூக்கத்தில் நடக்க காரணமாக இருக்கலாம்.

தூக்கத்தில் நடப்பதால் விபத்துகள் ஏற்பட்டு நடப்பவருக்கும் பிறருக்கும் உடல் காயங்கள் ஏற்படலாம். இது தவிர,

விவரிக்க முடியாத வித்தியாசமான செயல்களுடன் கூடிய தூக்கத்தில் நடப்பவர்களுக்கு பெரிய பாதிப்புக்கள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு என்பதால், அத்தகையவர்களை குணப்படுத்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தூக்கத்தில் நடக்கும் குறைபாட்டிற்கான சில சிகிச்சை முறைகள்:

ஆரோக்கியமான தூங்கும் பழக்கம் அதாவது சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க் காமல் இருப்பது,

தினமும் குறிப்பிட்ட நேரத் தில் உறங்குவது (தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வை இழக் காமல் இருக்க) இரவில் மது அருந்தும் பழக் கமுள்ளவர்கள், அதை அறவே அருந்தாமல் இருப்பது அல்லது குறைத்துக் கொள்வது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல