வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

பெற்றோல்

வாகனம் ஓட்ட மட்டுமா பெற்றோல் உதவுகிறது
பல்வேறு பொருட்களை தயாரிக்கவும் பயன்படும் பெற்றோல்

எரிபொருட்களில் தான் இன்று முழு உலகமும் இயங்குகிறது என்றால் அது மிகையல்ல. பூமியின் பல்லாயிரம் மீட்டர் ஆழத்தில் எப்பொழுதோ மண்ணுக்குள் மக்கிப்போன தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து உருவானதே மசகு எண்ணெய். இதிலிருந்தே பெற்றோல், டீசல் என பல்வேறு எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது பலரும் தெரிந்ததே.

ஆனால் மசகு எண்ணெயிலிருந்து மேலும் சில பொருட்கள் உருவாக்கப்படுவது பலருக்குத் தெரியாது.

பெண்களின் உதடுகளை கவர்ச்சியாக காட்டும் உதட்டுச்சாயம் எங்கேயிருந்து வருது தெரியுமா உங்களுக்கு? பெட்ரோலியம்/பெட்ரோலியம் சார்ந்த வேதியல் பொருட்களான க்ரைலேட்ஸ் கோல்டார் சாயங்கள் மற்றும் புரொப்பிலீன் கிளைக்கால், அது மட்டுமில்லாமல் உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்ச வேஸ்லின் பெட்ரோலியம் ஜெல்லி என்பன உதட்டுச்சாயம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறதாம்.

உலகத்தின் மின்சாரத் தேவையை சூரிய ஒளியினைப் பயன்படுத்தி பூர்த்தி செய்து மனிதனின் வயிற்றில் பாலை வார்த்துக்கொண்டிருக்கும் சோலார் தகடுகளின் (சூரிய மின் கலன்கள்) பிளாஸ்டிக் பகுதிகளும் ஒளி ஈர்க்கும் பகுதியும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களானவை. ஆனால் அதையும் தாவரம் சார்ந்த பொருட்கள் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உடை என்றாலே உலகம் விரும்புவது பருத்தியினாலான ஆடைகளைத்தான். ஆனால் பருத்தி ஆடை காலப்போக்கில் நூல் அகன்று வருவது, நைந்து போவது, சுருங்கிப்போவது இப்படி எத்தனையோ.

இதற்கெல்லாம் நிவாரணமாக வந்துள்ளது பாலிஸ்டர் ஆடைகள். இந்த பாலிஸ்டர் ஆடைகள் உருவாக பல வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களும் அவசியமாம். நம் அன்றாட அத்தியாவசிய தேவையான ஆடைகளுக்கும் பெட்ரோலியம் தேவைப்படுகிறது.

நம்மில் நிறைய பேருக்கு பிடித்த ‘பபுள் கம்’ கூட இந்த பெட்ரோலில் இருந்தே கிடைக்கிறது. பொலித்தீன் மற்றும் பாராஃபின் மெழுகிலிருந்துதான் உற்பத்தி செய்கிறாங்களாம். நாம் சாப்பிடும் ‘கம்’ கூட மக்காத குப்பை வகையைச் சேர்ந்ததுதான். பபுள் கம் சாப்பிடும்போது உங்களால் ஒரு சிறு பகுதி மக்காத குப்பை இந்த பூமியில் அதிகமாகும் யோசிச்சுப்பாருங்கள்.

குழந்தைகள் வருங்காலத்தில் பெரிய ஓவியராக வருவதற்கு ஓவியப் புத்தகத்தில் வரைந்து பயிற்சி எடுத்துக்கிறத்துக்கு உதவும் ‘க்ரேயான்’ பென்சில்களும் பெட்ரோலிலிருந்து கிடைக்கும் பாரஃபின் மெழுகில் செய்யப்பட்டது தானாம். மின்சாரமில்லாத இரவுப் பொழுதுகளில் வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்திகள்கூட இந்த பாரஃபின் மெழுகினாலானவைதான். வலியைப் போக்கும் பாம், காய்ச்சல் மற்றும் இருதய நோய் வராமல் தடுக்க உதவும் ஆஸ்பிரின் என்னும் மாத்திரை,

இந்த மாத்திரை பென்சீன் என்னும் வேதியல் பொருளிலிருந்து உருவாக்கப்படுகிறதாம்.

அந்த பென்சீன் கூட பெட்ரோலிலிருந்துதான் கிடைக்கிறதாம்.

உடலை இருக்கி அனைத்தபடி உடலின் பல்வேறு பகுதிகளில் அணியப்படும் ஒரு வகை நைலான் ஆடைகளான டைட்ஸ் அல்லது பேன்டிஹோஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெண்களுக்கான உள்ளாடைகள் என எல்லாமே பெட்ரோலிலிருந்து உருவாகும் ஒருவகை ப்ளாஸ்டிக்கான தெர்மோப்ளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுபவை.

பாத்திரங்கள் கழுவ உதவும் ஒரு வகை பஞ்சில் ஆரம்பித்து வானில் பறக்கும் பாரசூட் வரை எல்லாமே இந்த நைலானாலானவைதானாம்.

பெட்ரோல் வெறும் வாகனங்களையும் சில பல எந்திரங்களையும் இயக்க மட்டுமே உதவுகிறது என்று நினைத்திருந்த எமக்கு வித்தியாசமான ஆச்சரியமான, பலன்கள் கொஞ்சம் சுவாரசியமாகவும் புதிய தகவலாகவும் இருக்கிறது என்ன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல