சென்னையை சேர்ந்த அமெரிக்க மாடலும், அமெரிக்க டி.வி.சேனல் தொகுப்பாளருமான பத்ம லட்சுமி எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரபலம் ஆனார். அவரிடம் இருந்து பிரிந்த பிறகு இவர் டெல் கம்ப்யூட்டர் தொழில் நிறுவன அதிபரான மைக்கேல் டெல்லின் தம்பியும் முதலீட்டு நிறுவன அதிபருமான ஆடம் டெல்லை திருமணம் செய்து கொண்டார். இந்த பந்தம் மூலம் இவருக்கு மகள் பிறந்தாள். இந்த குழந்தைக்கு இப்போது 11 மாதம் ஆகிறது.
கிருஷ்ணா தியா என்று பெயரிடப்பட்ட இந்த குழந்தை பிறந்த பிறகு ஆடம் டெல், பத்மலட்சுமியை விட்டு பிரிந்து விட்டார். இப்போது அவர் மாதத்துக்கு 9 நாட்கள் மட்டும் தன் குழந்தையை பார்ப்பதற்கு சமரச ஏற்பாட்டின்படி அனுமதி பெற்று இருக்கிறார். அதுவும் குழந்தைக்கு ஒரு வயது நிறைவு அடையும் வரைதான் இந்த ஏற்பாடு. இம்மாதம் 20-ந் தேதி குழந்தைக்கு ஒரு வயது நிறைவு அடைகிறது. அதன்பிறகு அவர் குழந்தையை பார்க்க முடியாது.
இந்தநிலையில், குழந்தையை வளர்ப்பதற்கு அனுமதி கோரி, அவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக