வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

விலைமாதர் படங்களைப் பார்த்துச் சிக்கிய இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர் (படங்கள் இணைப்பு)

இத்தாலியில் பாராளுமன்ற விவாதத்தின் போது தனக்கு புதிதாக வழங்கப்பட்ட ஐ-பேட் கணனியில் விலை மாதர்களின் புகைப்படங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் புகைப்படமானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சமயத்தில் பாராளுமன்றத்தில் இருந்த புகைப்படக் கலைஞர் ஒருவரின் கமராவுக்கே இக்காட்சி சிக்கியுள்ளது.

சைமன் டி கக்னோ அப்ரெசிகா (66) என்ற அவ்வமைச்சர் இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனியின் கட்சியை சேர்ந்தவர் என்பதுடன் அவரது தீவிர ஆதரவாளரும் ஆவார்.

ஏற்கனவே இத்தாலிய பிரதமர் பல்வேறு பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவ்வேளை இவ்வமைச்சரின் இந்நடவடிக்கையும் அங்கு பெரிதாக பேசப்பட்டுவருகின்றது.

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் தனக்கு வழங்கப்பட்ட கணனியை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும்போது இவ்விலைமாதர்களின் விபரம் தற்செயலாக திரையில் தோன்றியதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வமைச்சர் ஏற்கனவே 3 தடவைகள் திருமணமானம் செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல