செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கிளிநொச்சியில் அண்மையில் கடத்தப்பட்ட மொடேன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் நாலாம்மாடியில் வைக்கப்பட்டுள்ளார்!

கிளிநொச்சியில் அண்மையில் கடத்தப்பட்ட மொடேன் ஸ்டோர்ஸ் உரிமையாளரும் வர்த்தகருமான கறுப்பையா தியாகராசா நாலாம் மாடியில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு கிளிநொச்சிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கேட்டிருந்தார்கள்.

அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் உள்ள அவரது வர்த்தக நிலையத்திற்கு வெள்ளை வானில் வந்தவர்களால் 'பேச வேண்டும்' என்று அழைத்துச் செல்லப்பட்டார். தியாகராசாவிற்கு குடும்பத்தினர் தொலையில் அழைத்த பொழுது கொழும்பிற்கு விசாரணைக்கு செல்வதாகவும் விசாரணை முடிந்த பின்னர் வருவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தியாகராசாவின் குடும்பத்தினர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் கறுப்பய்யா தியாகரசா கொழும்பில் நாலாம் மாடிக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் விசாரணை முடிந்த பின்னர் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் கிளிநொச்சி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல